உங்கள் நிலம் புறம்போக்கா தெரிந்து கொள்ள வேண்டிய 20 உண்மைகள் !

உங்கள் நிலம் புறம்போக்கா தெரிந்து கொள்ள வேண்டிய 20 உண்மைகள் !

Published by : KAMESH KANNAN (வெற்றி யுகம்/Vetri Yugam)

(We have Researched and Collected the Materials and Published in the Blog.)

அரசின் கட்டுபாட்டில் (அ) அரசினுடைய நிலங்கள் மற்றும் மக்கள் பயன்பாட்டிற்காக உள்ள நிலங்களை அரசு புறம்போக்கு நிலங்கள் என வகைபடுத்தப்பட்டுள்ளது.

கல்லாங்குத்து மேடு போன்று இருக்கும் நிலங்களை அரசு தீர்வை ஏற்படாத தரிசு என்று வகைப்படுத்தி, தீர்வை ஏற்படவில்லை என்றாலும் அதனை புறம்போக்கு என்றே சொல்வர்.

ஒவ்வொரு கிராமத்திலும் அரசு புறம்போக்கு நிலங்களை சர்வே எண் வாரியாக வகைப்படுத்தி தனி கணக்கு பதிவேடு வைத்து இருப்பர்.

நீர்நிலை புறம்போக்கு, நத்தம் புறம்போக்கு, ஆகிய இரண்டு புறம்போக்கு நிலங்கள் மக்களால் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டியவை.

ஏரி, குளம், குட்டை , ஓடை, கால்வாய் போன்ற நீர்நிலைகள் மற்றும் அதனை ஒட்டி இருக்க கூடிய அரசு நிலங்களை நீர்நிலை புறம்போக்கு என்று சொல்வர்.

நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமம் செய்ய கூடாது என்று, தனி அரசு உத்தரவே இருக்கிறது. அதனால் அனுபவ உரிமை ஏற்பட்டு பட்டா கொடுக்க வாய்ப்பு இல்லை.

சென்னை, மதுரை, கோவை போன்ற பெருநகரங்களின் நீர்நிலை அருகே இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு சவாலாகவே இருக்கிறது.

நீர்நிலை புறம்போக்கு நீங்கலாக வேறு புறம்போக்கு நிலங்களை அரசுக்கு தேவைபடாத பட்சத்தில் அதனை அனுபவிக்கும் மனையில்லா மக்களுக்கு பட்டா வழங்க அரசு உத்தரவிட்டிருகிறது.

குடியிருப்பு பகுதியில் இருக்கும் புறம்போக்கு பெயர், நத்தம் புறம்போக்கு ஆகும். நத்தம் என்றால் குடியிருப்பு பகுதி என அர்த்தம் நத்தம் நிலங்களில் பட்டா வாங்கிவிட்டால், நத்தம் பட்டா நிலம் என்று பெயர். பட்டா வாங்காத நத்தம், புறம்போக்கு நிலம் ஆகும்.

நத்தம் புறம்போக்கு இடத்தில் மனைக்கட்டு இல்லாதவர் குடியிருந்தால் பெரும்பாலும் நத்தம் பட்டா வழங்கிவிடும். தமிழகம் முழுவதும் நத்தம் எவ்வளவு நிலங்கள் என்று துல்லியமாக கணக்கில் கொண்டு வரவில்லை. நத்தம் நிலத்தில் இருக்கும் பட்டாவை இன்னும் கணினி மயம் ஆக்கப்படவில்லை.

நத்தம் நிலவரி திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு ஒவ்வொருவருடைய அனுபவத்தில் உள்ள நத்தம் நிலத்தை உட்பிரிவு செய்யப்பட்டு புறம்போக்கு நிலங்களை கண்டறிந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுத்தனர்.

அரசு புறம்போக்கு நிலத்தில் 5 ஆண்டுகளாக குடியிருந்து வருவோருக்கு அவர்களுடைய ஆகிரமிப்புகளை வரன்முறை செய்து வீட்டு மனை பட்டாவாக வழங்குகின்றனர். இவை பெரும்பாலும் பெருநகர பகுதிகளில் நடப்பதில்லை.

நிறுவனங்கள், தனியார், தனிப்பட்ட நபர்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றிற்கு அதிகபட்சமாக 30 வருடம் வரை லீசுக்கு விட உரிமை உண்டு. லீசு தொகை மூன்றாண்டுக்கு ஒரு முறை மாற்றியமைக்கவும் வேண்டும். லீசு தொகை அளவை பொறுத்து வட்டசியாளாரிடமிருந்து மாநில நில நிர்வாக ஆணையர் வரை பொறுப்பேற்று இதனை கவனிப்பர்.

புறம்போக்கு இடங்கள் மாநில அரசில் இருந்து மத்திய அரசிற்கு மாற்றப்படுவது டிரான்ஸ்பர் ஆப் லேன்ட் ( TRANSFER OF LAND )

புறம்போக்கு இடத்தை மத்திய அரசுக்கோ அல்லது மத்திய அரசு நிறுவனங்களுக்கோ, உதாரணமாக ரயில்வேகளுக்கோ, விமான போக்குவரத்து நிறுவனத்திற்க்கோ இலவசமாகவோ மார்கெட் மதிப்பின் அடிப்படையில் மாற்றி விடுவது நடைமுறையில் இருக்கிறது.

மாநில அரசின் வணிகநோக்கு அல்லாத பள்ளி, மருத்துவமனை, ஆரம்ப சுகரதார நிலையம் போன்றவற்றிற்கு புறம்போக்கு நிலத்தை இலவசமாக மாற்றி கொள்ளலாம். (TRANSFER)

அரசு புறம்போக்கு இடங்களான, நீர்நிலை புறம்போக்குகள், கோயில் இடங்கள், அரசுக்கு தேவைப்படக்கூடிய இடங்கள், போன்றவற்றை அகற்ற அரசுக்கு முழு உரிமை உண்டு.

வருவாய்துறை, பொதுப்பணித்துறை, நெடுசாலைத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், நகராட்சி மற்றும் மாநகராட்சிகள் ஆகியவற்றிற்கு ஆக்கிரமிப்பை அகற்ற தமிழ்நாடு என்குரோச்மெண்ட் ஆக்ட் 1905 கீழ் அதிகாரம் உண்டு.

ஆக்கிரமிப்பை அகற்றும் குழுவுக்கு மாவட்ட அளவில் சேர்மேன் ஆக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் துறை அதிகாரி PWD மாவட்ட உயர் அதிகாரி, நெடுஞ்சாலை துறை Division Engineer, வனத்துறை மாவட்ட அலுவலர் ஆகியோர் குழுவினராக இருந்து, மாதம் ஒருமுறை கூடி ஆக்கிரமிப்பு அகற்ற திட்டமிடுகிறார்கள்.

அதனை மாநில நில நிர்வாகம் பரிசீலனை செய்யும். இது போன்ற நடவடிக்கைகள் எடுப்பதால் புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பது என்றும் நிச்சயம் இல்லை என்ற எண்ணம் மக்கள் மனதில் இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *