மாநில எல்லைகளில் நிலம் வாங்கும் போது தெரிந்து கொள்ள வேண்டியது

Published by : KAMESH KANNAN (வெற்றி யுகம்/Vetri Yugam)

(We have Researched and Collected the Materials and Published in the Blog)

கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பாண்டிசேரி ஆகிய தமிழ்நாடு ஒட்டிய மாநிலங்களில் பெரும்பரப்பு நிலங்கள் வாங்கும் போது தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால்.

 

  1. பொதுவாக மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த பிறகு, அதாவது 1954 க்கு பிறகு, துல்லியமான அளவில் எல்லைகளை நாம் பிரிக்கவில்லை என்பதே உண்மை, அதனால் பல இடங்களில் இரண்டு மாநில சார்பதிவகத்தில் பதிவுகள் நடப்பதால் என்று சரட்டை ஆவணங்களாக பல சொத்துக்கள் இருக்கின்றன. எல்லையோரம் இருக்கும் இரு மாநில அரசுகளும் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாநில எல்லைகளை ஆய்வு செய்து சரி செய்து கொள்ளலாம்.

 

  1. தமிழ்நாடுகேரளா மாநிலங்களுக்கு இடையே எல்லையின் 830.1Km நீளமும், தமிழ்நாடுஆந்திரா மாநிலங்களுக்கு இடையே எல்லையின் நீளம் .578. 8 கி.மீ. தமிழ்நாடுகர்நாடகா மாநில எல்லை இடையே 481.0 கி. மீ நீளமும், தமிழ்நாடுபாண்டிச்சேரி எல்லையின் மொத்த நீளம் 353.88 கி.மீ. உள்ளது.

 

  1. எல்லையோர கிராமங்களில் இரண்டு மாநிலம் வாக்காளர் அட்டை, இரண்டு மாநில ரேசன் அட்டை என இரண்டு மாநிலத்திலும் மக்கள் பயனடைகின்றனர். இதனை வைத்து பல ஆவணங்களை இரண்டு மாநிலத்திலும் உருவாக்கின்றனர். இதனை நாம் கவனித்து கொண்டு நிலத்தை வாங்க வேண்டும்.

 

  1. மாநில எல்லை சர்வே இன்னும் முழுமையாக முடிந்தபாடில்லை, இன்னும் நிர்ணயித்த பாடில்லை.

 

  1. ஓசூர் சுற்றியுள்ள கிராமங்களில் தெலுங்கும், கன்னடமும் முழுவதும் பேசுகின்ற கிராமங்கள் இன்னும் இருக்கின்றன.

 

  1. தமிழ் பேசுகின்ற கிராமங்கள், ஆந்திரா, கர்நாடாகவிலும் உள்ளன.

 

  1. இவர்களின் பூர்வ கிரைய பத்திரங்கள் அவர் அவர் தாய் மொழியிலேயே இருக்கின்றன. சமீபத்திய காலம் வரை தமிழக பதிவு அலுவலகங்களில் தெலுங்கிலும் கன்னடவிலும் பத்திரங்கள் ஆகின்றன.

 

  1. எனவே பிற மாநில மொழி ஆளுமை தெரியாமல் கிரயம் வாங்க இறங்க கூடாது.

 

  1. கேரளா மாநிலத்தில் ஒரு சொத்தும், தமிழகத்தில் ஒரு சொத்தும், ஒரு கேரளாகாரருக்கு இருந்து இரண்டு சொத்தையும் அவர் மற்றொரு கேரளா காரருக்கு கிரயம் செய்ய கேரளா பதிவு அலுவலகத்திலேயே பதிவு செய்கின்ற நடைமுறை சமீபத்திய காலம் வரை நடந்தது.

 

  1. அதனால் தமிழ்நாட்டு சொத்து , தமிழக பதிவு அலுவலக E.C யில் காட்டாது. இதனால் பல சிக்கல்கள் இதனை பயன்படுத்தி கேரளாவில் ஒரு தொடர் சங்கிலி ஆவணங்களும் தமிழ்நாட்டில் ஒரு தொடர் சங்கிலி ஆவணங்கள் என டபுள் டாகுமென்ட்டுகளாக விழ ஆரம்பித்து விட்டன.

 

  1. 20 ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழக சொத்துக்கள் பிற மாநில பதிவகத்தில் பதிவது செல்லாது என அறிவித்துள்ளது.

 

  1. தமிழக சொத்திற்காக பிற மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட உயில், தானம், ஹிபா, இறப்பு சான்று, வாரிசு சான்று போன்றவற்றின் மெய்தன்மையை தீர விசாரித்தே செயல்பட வேண்டும்.

 

  1. தகவல் பெறும் உரிமை கேரளா மற்றும் தமிழ்நாடு எல்லைகள் நிர்ணயித்தாயிற்றா என்று நான் கேள்விகள் கேட்டு பதில் வாங்கி இருந்தேன். அதில் தமிழ்நாடு கேரளா எல்லையின் நீள 830.1km என்றும், மொத்த நீளமும் அளந்து சர்வே செய்யவில்லை எனவும், பொது எல்லை இதுவரை நிர்ணயிக்கவில்லை என்று பதில் அளித்து இருக்கின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *