ஜமாபந்தி உங்களுக்கு பயனான தகவல்ள்.
1. ஜமாபந்தி, ஆண்டு தோறும் மே, ஜூன் மாதத்தில் வருவாய்த் துறையினரால்கிராமந்தோறும் நடத்தப்படும் கிராம கணக்குகள் குறித்த தணிக்கை(AUDIT) முறையாகும்.
2. இம்முறை ஜமாபந்தி என்ற பெயரால் இந்தியாவை ஆண்ட பிரித்தானியர்களால்நடைமுறைப்படுத்தப்பட்டது.
3. இந்த வருவாய் தீர்வாயத்தில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்மற்றும் கிராம நிருவாக அலுவலர்ஆகியோர் கலந்து கொள்வார்கள்.
4. இதில் விவசாய நில பட்டா மாறுதல் கோரி, நத்தம் பட்டா மாறுதல் கோரி, வீட்டு மனை பட்டா மாறுதல் கோரி, நில அளவை செய்யக்கோரி, நிலஉட்பிரிவு கோரி மனு செய்யலாம்.
5. பட்டா மாறுதல் தொடர்பான விண்ணப்பத்துடன் கிரயப்பத்திரம், மூலப்பத்திரம், வில்லங்க சான்றிதழ் இணைத்து வழங்கினால் அனைத்து ஆவணங்களும் கிராம கணக்கும் சரியாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக பட்டா மாறுதல் செய்யப்படுகிறது.
6. வீட்டுமனை இல்லாதவர்கள் இலவச வீட்டுமனை கேட்டும் விவசாய நிலம் இல்லாத ஏழைகள் ஒடுக்கப்பட்டவர்கள் இலவச நிலம் கேட்டு விண்ணப்பிக்கலாம்.
7. ஜமாபந்தியில் எல்லா அதிகாரிகளையும் ஒரே நாட்களில் சந்திக்கலாம்.சாதாரண அலுவல் நாட்களில் இவை இயலாத விடயம்.
8. ஜமாபந்தியில் நம்முடைய மனுக்கள் கையெழுத்தாக வேண்டிய ஒவ்வொரு டேபிளுக்கும் உடனுக்கு உடனே நகர்ந்து விடும்.மற்ற அலுவல் நாட்களில் சீக்கிரம் டேபிள் டூ டேபிள் நகராது.
9. ஜமாபந்தியில் பொதுமக்கள் பணிகள் மட்டுமே முதன்மை பணி..பிற அலுவல் நாட்களில் வேறு வேறு பணி சுமைகளில் மூழ்கி இருப்பர்.
10. ஜமாபந்தியில் வரும் மனுக்களுக்கு கையூட்டு தொல்லைகள் இருக்காது.
11. ஏழை விவசாயிகளுக்கு போக்குவரத்து ,அலைச்சல், அதிகாரிகள் நேரடி ஆய்வு போன்ற நேர, பண விரயங்கள் குறையும்.
12. Proactive (Asset Builders) சொத்து சேர்ப்பவர்கள் ஆண்டுதோறும் வரும் ஜமாபந்தியை உங்கள் சொத்து பராமரிப்பதற்கான வாரமாக ஒதுக்கி கொள்வது நல்லது.
13. ஜமாபந்தியிலும் அங்கங்கே குறைகளும் தவறுகளும் நடக்கின்றன.அரசு ஊழியர்கள் கொஞ்சம் பொறுப்பெடுத்தால் பொதுக்களுக்கு மிக பயனுள்ள தேவையான திட்டம் இந்த ஜமாபந்தி ஆகும்.
14. ஜமாபந்தியை ஆண்டுக்கு ஒரு முறை என்பதில் இருந்து இரண்டு முறை என்று மாற்றினால் மிக சிறப்பாக இருக்கும்.
15.தமிழத்தின் அனைத்து தாலுகாக்களிலும் மே மற்றும் ஜுன் மாதங்களில் ஏதாவது 10 நாட்கள் ஜமாபந்தி நடக்கும். சனி,ஞாயிறு,திங்கள்,அரசு விடுமுறை நாட்ககளில் ஜமாபந்தி நடக்காது.

Published by : KAMESH KANNAN (வெற்றி யுகம்/Vetri Yugam)
(We have Researched and Collected the Materials and Published in the Blog.)