வெளிநாடுகளில் இருக்கும் இந்திய குடிமக்கள் சொத்து பறிபோகாமல் இருக்க வேண்டுமா !

வெளிநாடுகளில் இருக்கும் இந்திய குடிமக்கள் பவர் கொடுக்கலாம்

Published by : KAMESH KANNAN (வெற்றி யுகம்/Vetri Yugam)

(We have Researched and Collected the Materials and Published in the Blog.)

1.வெளிநாடுகளில் இருக்கும் இந்திய குடிமக்கள் இங்கு சொத்து வாங்கவோ, பராமரிக்கவோ தங்களால் நேரில் வந்து செயலாற்ற முடியாத போது உங்களுக்கு நம்பிக்கையான நபருக்கு பொது அதிகாரம் கொடுக்க வேண்டும்.

2.பொது அதிகாரம் பத்திரம் பெரும்பாலும் இந்தியாவில் விடுமுறையில் இருக்கும் போதோ இங்குள்ள பத்திரபதிவு அலுவலகத்தில் வைத்து நம்பிக்கையானவருக்கு பவர் கொடுக்கலாம்.

3.இங்கு இருக்கும் போதே கொடுத்துவிட்டால் வீண்   செலவுகள் குறையும்.வெளிநாடுகளில் அட்வகேட்டுக்ககு அப்பாயிண்ட்மெண்ட் வாங்குவது,தூதரகம்னன்னா வருமான கணக்கு வழக்கு கேள்விகள் போன்ற கூடுதல் வேலை பளு சுமக்க வேண்டி இருக்கும்.

4.தவிர்க்க முடியவில்லை என்றால் வெளிநாட்டில் இருந்தபடியே கூட இந்தியாவில் இருப்பவருக்கு பவர் கொடுக்கலாம். பவர் கொடுக்கும் போது, தூதரக அலுவலர் அல்லது நோட்டரி பப்ளிக் கையெழுத்து இட வேண்டும்.காமன்வெல்த் நாடுகள் என்று இங்கிலாந்துக்கு   அடிமையாக யார் யாரரெல்லாம் இருந்தார்களோ அங்கு நோட்டரி பப்ளிக் செல்லும்.

5.மீதி நாடுகளில் இந்திய ஹை கமிஷன் கான்சல் அதிகாரி முன்னிலையில் பவர் கொடுப்பவர் கையெழுத்து இட வேண்டும்.

6.வெளி நாடுகளில் இந்திய முத்திரைத்தாள்கள் கிடைக்காது அதனால் வெள்ளை பேப்பரில் தெளிவாக எழுத வேண்டியவைகளை டைப் செய்து ஆவணத்தை உருவாக்க வேண்டும்.

7.இந்தியாவில் இருக்கும் போது முத்திரத்தாளை வாங்கி வைத்தது ஒன்று வெளிநாட்டில் இருக்கிறது. என்று அதனை பயன்படுத்த கூடாது. வெளிநாட்டு முத்திரைத் தாள்களையும் பயன்படுத்த கூடாது.

8.மேற்படி எழுதிய பத்திரத்தை கையெழுத்து இட்டு இந்தியாவில் உள்ள உறவினருக்கு தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். SCAN செய்து மெயில் அனுப்பலாமா? என்று கேட்காதீர்கள்.

9.உங்கள் உறவினர் மேற்படி ஆவணம் கையில் கிடைத்த மூன்று மாதங்களுக்குள் இங்கு இருக்கிற மாவட்ட இணை சார்பதிவகத்தில் “அட்ஜூடிகேட்” செய்ய வேண்டும்.

10.“Adjudication” என்பது மேற்படி பத்திரத்தை இந்தியாவில் உபயோகித்து கொள்ளும் உரிமையை பெறுவது ஆகும்.

11.மாவட்ட பதிவாளர் வெளிநாட்டில் இருந்து வந்த ஆவணத்தை சோதனையிட்டு, தேவையான முத்திரைதாளை பெற்று பவர் வாங்கியவரின் போட்டோவை அதில் ஒட்டி, சான்று செய்து Adjudication எண் ஒன்றும் தருவார்.

12.பவர் கொடுக்கும் போது பெரும்பாலும் சொத்து விற்கலாம் என்றும் தனி நபரிடம் அடமான கடன் வாங்கலாம் போன்ற அதிகாரங்களை கொடுக்க வேண்டாம்.

13.வீடு, மனை, சொத்து வாங்க உங்கள் பெயரில் வங்கி கடன் வாங்க தேவையானஆவணங்களை கையழுத்து இட அதிகாரம் கொடுக்கலாம்.

14.பவர் பத்திரம் ஒன்று தெளிவாகவும், பாதுகாப்பகவும் கொடுத்து விட்டால் இங்கு அடிக்கடி வர தேவையில்லை. இங்கும், அங்கும் உங்கள் பணிகள் தடையில்லாமல் நடக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *