சர்வேக்களின் வகைகள்

சர்வேக்களின் வகைகள்

(1) MINE SURVEY

1.கனிமவளங்கள்,
2.தாதுக்கள் ,
3.நிலகரி,
4.எரிவாயு,
போன்றவற்றை எல்லாம் ஆய்வு செய்வதும், கணக்கெடுப்பதும் அதற்கான வரைபடங்களை தயார் செய்வதும் MINE SURVEY என்று சொல்வார்கள்.

(2) ARCHAELOGOCAL SURVEY

பழங்கால நினைவு சின்னங்களை, தொல்பொருள் ஆய்வுகளை செய்வதும்,
குரிப்பெடுப்பதும், ஆவணங்கள் தயாரிப்பதும், ARCHAELOGOCAL SURVEY என்று
சொல்வார்கள்.

(3) HYDROLOGICAL SURVE

கடலில் உள்ள கனிமங்களையும் உயிர் சூழ்நிலைகளையும், ஆய்வு செய்வதும், ஆவணபடுதுவதும், HYDROLOGICAL SURVEY என்று சொல்வார்கள். வானில் உள்ள நட்சத்திரங்கள், விண்பொருட்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வதும், ஆவணப்படுத்துவதும், ASTROLOGICAL SURVEY என்றும் சொல்வார்கள்.

(4) GEODEDIC SURVEY

பூமியின் மேற்பரப்பை அளப்பதும், ஆய்வு செய்வது, ஆவணபடுத்துவது.,. GEODEDIC SURVEY என்று சொல்வார்கள்.

இப்படி பல சர்வேக்கள் நில அளவை சர்வே எதில் வருகிறது என்றால் பூமியின் மேற்பரப்பை இருக்கின்ற GEODEDIC SURVEY இல் ஒரு மூலையில் கொஞ்சமாக வருகிறது.

GEODEDIC SURVEY  இல் TOPOGRAPHICAL SURVEY , ENGG SURVEY, MINE SURVEY ,
ARCHAELOGOCAL SURVEY வருகிறது. நில அளவை சர்வேயும் (கதாஸ்டரல் சர்வே) GEODEDIC SURVEY இல் தான் வருகிறது. நிலஅளவை சர்வே பாடத்தில் தொழில் நுட்ப பெயரால் கடாஸ்ட்ரல் சர்வே என்று சொல்கிறார்கள். வெகு மக்களுக்கு கடாஸ்ட்ரல் சர்வே என்றால் என்ன என்று தெரியாது. கொங்கு பகுதிகளில் இன்றும் புல எண்ணுக்கு க.ச .எண் என்பார்கள் ஆனால் அதற்கு விரிவாக்கம் பலருக்கு தெரியாது. கடாஸ்டரல் எண் என்று அரத்தம். அப்படியே பாண்டிசேரிக்கு வந்தால் கதாஸ்டரல் ஆவணங்கள் என்றுதான் சொல்வார்கள் அதற்கு அரத்தமும் பலருக்கு தெரியாது .கடாஸ்டரல் என்பது நிலத்திற்கு வரி விதிப்பிற்காக செய்யும் சர்வே என்று பெயர். கொடாஷ்ட்டல் சர்வே என்பது ஒரு ரோமன் நிலவரி திட்ட பெயராகும். அதனையே நாம் இன்றும் பயன்படுத்தி இருகின்றோம். மக்களும் நில சர்வே என்று தான் சொல்கிறார்கள். மக்களின் புழக்க பெயராக நில சர்வே இருக்கிறது. கடாஸ்டரல் சர்வே என்ற வார்த்தை அனைவரின் வாயிலும் வருவதில்லை. எளிமையாக நில சர்வே என்று சொல்கிறார்கள். நில சர்வே என்று சொல்வதை நாம் கொடாஷ்ட்டல் சர்வே என்று தான் புரிந்து கொள்கிறோம், இந்த சர்வேக்கெல்லம் எந்த விஷயம் தெளிவாக தெரிந்து வைத்து இருக்க வேண்டும் என்றால் கணக்குதான் கணிதம்தான். சர்வே கணிதம் என்பது சாதரணமான விஷயம் அல்ல அற்புதமான ஒன்று . மேலே சொன்ன எல்லா சர்வேக்களும் ஒரே அடிப்படை மற்றும் ஒரே FOUNDATION தான் அது சர்வே கணிதம் தான் நாம் படிக்கும் காலத்தில் போடுகின்ற கணக்குகளை தான் .எப்படி போட வேண்டும் என்று சொல்லிகொடுகின்றார்களே தவிர ஏன் போடவேண்டும் என சொல்ல மறந்து விடுகின்றார்கள். எல்லா சர்வேக்கும் அந்த சர்வே துறையின் ஆவணங்களின் அடிப்படையில் தான் இந்த நாட்டின் நிர்வாகமே இயங்குகிறது. அதனால் தான் படிச்சு IAS ஆகி கலெக்டர் ஆனபிறகும் அவரை சர்வே வை கற்றுகொள்ள மாவட்ட சர்வேயரிடம் வகுப்பிற்கு போகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *