மனை நிலம் வாங்கும் பொழுது ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க நினைவில் வைத்து கொள்ள வேண்டிய சட்டங்கள்

Published by : KAMESH KANNAN (வெற்றி யுகம்/Vetri Yugam)

(We have Researched and Collected the Materials and Published in the Blog)

சட்டங்கள் விளக்கம்

SURFACES ACT – சொத்து வங்கியில் அடமானத்தில் இருந்தால்இந்த சட்டத்தின் கீழ் சொத்து இருக்கும்

SPECIFIC RELIEF ACT 1963 – சொத்து ஏற்கனவே வேறு ஒரு நபருக்கு விற்க முயற்சித்து அதில் ஒப்பந்தம் சம்மந்தமாக நீதிமன்றத்தால் வழக்கு இருக்க வாய்ப்பு இருக்கும் (அ) அவ்வாறு வழக்கு எதுவும் உள்ளதா என்று தீர விசாரித்து சொத்துக்களை வாங்குதல் வேண்டும்

THE HINDU MINORITY GUARDIAN Slip Act 1956 – சொத்து மைனாரிட்டிடம் (அ) தாய், தந்தை இல்லாமல் மைனாரிட்டியின் பாதுகாவலரிடமும் சொத்து இருக்கிறதா என பார்க்க வேண்டும். பூர்வீக சொத்துக்கள் வாங்கும்போது மைனாரிட்டிகள் இருந்தால் கருத்தில்கொண்டு வாங்குதல்
வேண்டும்.

SUIT OF DECLARES & POSSE ON DEE PATES – எங்களுடைய இடம் வேறு நபர் ஆக்கிரமித்து இருக்கிறார் FOR PARTITION SUIT என்றும்,சகோதரர்களிடையே பாகம் பிரித்து கொடுக்க வேண்டும் என்ற வழக்கும்,பெரும்பாலும் நீதிமன்றங்களில் நடக்கும். அதில் தீர்ப்புகள் இடைக்கால உத்தரவுகள், தடைகள் போன்றவற்றை இடம் வாங்கும் பொழுது

HINDU SUCCESSION 1956 CHRISTIAN – பெண்களுக்கு சொத்துரிமை,  இரண்டு மூன்று
மனைவிகள், MUSLIM SUCCESSION வாரிசுகள் சொத்துரிமை எழாமல் இருக்கிறதா என்று கருத்தில் கொண்டு நிலங்களை வாங்க வேண்டும்.

LAW OF WILLS – சொத்தில் உயில் இருந்தால் மேற்படி உயிலை Probate செய்ய வேண்டுமா (அ) வேண்டாமா என்றும் உயில் மெய் தன்மையை தீர விசாரித்தும் சொத்து வாங்க வேண்டும்.

TAMIL NADU LAND REFORM – மேற்படி சட்டத்தின் கீழ் இதனை ஏக்கர் நிலத்திற்கும்
மேல் (FIXATION & CEILING ON LAND)1961 வைத்து இருக்க கூடாது என உச்ச வரம்பு சட்டம் உள்ள பகுதிகளில் கவனமாக நிலங்களை வாங்க வேண்டும்

URBAN LAND (CEILING AN REGULATION) – பெரு நகரங்களின் புற பகுதிகளில் பெருபாலும் இந்த சீலிங் ACT – 1976 இருக்கும் தீர ஆராய்ந்து மேற்படி இடங்களை வாங்க வேண்டும்.

LAND ACCURACY ACT 1894 & 2013 – மேற்க்கண்ட சட்டங்கள் மூலமாக பொதுபயனுக்காக அரசு தனியார் இடங்களை ஆர்ஜிதம் செய்ய இந்த சட்டம் போட்டு இருக்கும்,இந்த இடங்களை அறவே வாங்காமல் தவிர்க்க வேண்டும்.

TAMIL NADU ESTATES ( ABOLITION AND – ஜமின் ஒழிப்பின் போது போட்ட சட்டம், ஜமீன் நிலங்கள் CONVERSION IN RYATWARI ) ACT 1963 மக்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இன்னும் சில ஜமீன்,நிலங்கள் நீதிமன்றங்களில் வழக்குகளாக இருக்கின்றன. பெரும் சொத்துக்களை வாங்கும் பொழுது ஒரு கழுகு பார்வை இந்த சட்டத்தில் இடம் மாட்டி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

BINAMI PROPERTY Act – 1988 – இந்த சட்டத்தில் தற்போது பல அமென்ட் மேண்டுகள் போடப்பட்டு கருப்பு பண ஒழிப்புக்காக பயன்படுத்துகின்றன. ரியல் எஸ்டேட்டில் தான் அதிகப்படியான கருப்பு பணம் பினாமிகள் வைக்கப்படுகின்றன என்பதை அறிந்தால் அதிக அளவில் அபாரதம், தண்டனை உண்டு. அது மாதிரியான சொத்துக்கள் என தாங்கள் கவனமுடன் பார்த்து வாங்குதல்.

TRIBAL LAND ACT – பழங்குடியினர் வாழ்வாதாரங்களை பாதுகாக்க மேற்படி சட்டம்
அவர்களின் நிலங்களோ (அ) அவர்களுக்கு அருகில் நிலங்கள் வாங்குவது தடுக்கப்பட்டு உள்ளன.

INDIAN FOREST ACT 1929 – மலைகளில் பாதுகாக்கப்பட்ட காடுகளில் (அ) Re saved காடுகளில், அருகில் தோட்டங்கள், பண்ணைகள் வாங்கும் பொழுது இந்திய வரை சட்டத்திற்கு எதிராக அமையாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.

INDIAN STAMP ACT 1899 – முத்துரை தாள்கள் சம்மந்தப்பட்ட சட்டம், முத்திரைத்தாள் குறைவு அதிக பிரச்சனைகள் சம்மந்தமாக இந்த சட்டம் இடம்வாங்குபவருக்கு தேவை படும்.

TRANSFER OF PROPERTY ACT 1822 – இந்த சட்டத்தின் அனைத்து சொத்து
பரிமாற்றங்களும் நடந்து இருக்கிறதா (அ) அதற்கு எதிராக உள்ளதா என ஆராய
வேண்டும்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *