நிலத்தின் நாட்டு வழக்கு பெயர்கள்

Published by : KAMESH KANNAN (வெற்றி யுகம்/Vetri Yugam)

(We have Researched and Collected the Materials and Published in the Blog)

நிலத்தை அதன் தன்மையை பொருத்து , பயன்பாட்டை பொருத்து, நிலத்தின் மீது நடந்த மனித முயற்சியினை வைத்து அதற்கு பல்வேறு காரண பெயர்களையும் இடு பெயர்களையும், தமிழிலும், தமிழ் வட்டார வழக்குகளிலும் குறிப்பிடுவதை தமிழகம் முழுவதும்.

பல்வேறு பத்திரங்களையும், பழைய ஆவணங்களையும் நாம் பார்த்த பொழுது இன்னும் பல பெயர்கள் பயன்படுத்தப்படுவதை தெரிந்து கொள்ள முடிந்தது.

இவ் வார்த்தைகளை முழு அர்த்தத்துடன் நாம் தெரிந்து கொள்ளும் பொழுது ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் நிலங்கள் பற்றி புரிந்து கொள்ளமுடியும்.

ஊர் மானியம் – ஊரின் பொது ஊழியத்திற்க்காக விடப்பட்ட வரியில்ல நிலம்

ஊரிக்கை – ஊரை சார்ந்த நிலம்

காவிதி புறம் – அரசரை கவிதை பாடியதற்கு கொடுக்கப்பட்ட நிலம் (
வரிவிலக்கு)

சாந்து புறம் – அரசருக்கு சந்தனம் கொடுத்து வருவதருக்கு விடப்பட்ட நிலம்
வரிவிலக்கு)

மடப்புறம் – மடத்திற்காக விடப்பட்ட நிலம் ( வரி விலக்கு)

அடிசிற்புரம் – உணவிற்காக விடப்பட்ட நிலம் ( வரி விலக்கு )

அறப்புறம் – தரும செயலுக்கு வரி விலக்குடன் விட்ட இடம்.

இறையிலி – வரி நீக்கப்பட்ட இடம்

கடவுளின் (அ) – கோயில் விடப்பட்ட இறையிலி இடம்.
கோயில் இடம்

சுவாஸ்தியம் (அ) – பரம்பரையாக வரும் நிலம் சுவாதீயம்

பூர்வீக பாத்தியம் – பரம்பரையாக வரும் நிலம்

அடுத்தூண் – பிழைப்புக்கு விடப்பட்ட நிலம்

ஒரு போகு – ஒரே தன்மையுடைய நிலம்

இதை – புன்செய் சாகுபடி நிலம்

கூ – நிலம்

குறிஞ்சி – மலையும் மலை சார்ந்த இடமும்

முல்லை – காடும் காடு சார்ந்த இடமும்

மருதம் – வயலும் வயல் சார்ந்த இடமும்

நெய்தல் – கடலும் கடல் சார்ந்த இடமும்

பாலை – பாலை நிலம்

கடறு – பாலை

தெரி – பாலை

உவர் நிலம் – உப்பு தன்மை நிலம்

சுரம் – பாலை

தண்பனை – மருதநிலம்

காணபாட்சி – உரிமை நிலம்

கரம்பு – சாகுபடி செய்யாத நிலம்

கரம்பை – வறண்ட களிமண் நிலம்

களர் – சேற்று நிலம்

கொல்லை – முல்லை நிலம்

சோலை – முல்லை நிலம்

கடுந்தரை – இறுகிய நிலம்

கொத்துக்காடு – கொத்தி பயிரிடுவதற்குரிய நிலம்

விளை நிலம் – விளையக்கூடிய இடம்

நன்செய் நிலம் – நீர் கிடைக்கக்கூடிய, பாசனம் உள்ள இடம்

தோட்டக்கால் – கிணற்று பாசனம்

இறவை – கிணற்று பாசனம்

நதி மாதுருகம் – ஆற்று பாய்சல் நிலம்

நீராம்பம் – நீர்பாசன வசதி உள்ள நிலம்

நீர் நிலம் – நன்செய் நிலம்

திருத்து – நன்செய் நிலம்

கழனி நிலம் – நன்செய் நிலம்

காணி – நன்செய் நிலம்

புன்செய் நிலம் – மழையை நம்பும் பாசனம்

காடு – புன்செய் நிலம்

வானம் பார்த்த பூமி – புன்செய் நிலம்

செய்கால் கரம்பு – தரிசாக விடப்பட்ட நிலம்

தரிசு – சாகு படி செய்யப்பாடமல் கிடக்கும் நிலம்

தரை – பூமி

பூமி – நிலம்

கீழ்மடை – கிழக்கே இருக்கும் நீர் பாசன இடம்

மேல மடை – மேற்கே இருக்கும் நீர் பாசன இடம்

கடை மடை – இறுதியாக நீர்பாயும் இடம்

தினைபுனம் – தினை வகைகள் விளையும் நிலம்

திகர் – மேட்டு நிலம்

உள்ளடி நிலம் – ஏரியை அடுத்துள்ள நிலம்

ஆற்றுபகை – நதிநீர் பாசனத்தால் உள்ள வண்டல் நிறைந்த நிலம்

கல்லாங்குத்து நிலம் – ( கற்கள் மிகுந்து காணப்படும் நிலம்)

வட்டகை நிலம் – சுற்றிலும் வெளியிதப்பட்ட நிலம்

அசும்பு – வழுக்கு நிலம்

மேய்ச்சல் நிலம் – கால்நடை மேயும் நிலம்

செம்பாட்டு நிலம் – செம்மண் நிலம்

சேவலை – செம்மண் நிலம்

கரிசல் – கருப்புமண் நிலம்

களிதரை – களிமண் நிலம்

நத்தம் – கிராமத்தில் வீட்டுமனை

மேட்டு கழனி – மேடான நன்செய்

பள்ளக்காடு – பள்ளமான புன்செய்

பயிரிலி – தரிசு நிலம்

பழந்தரை – நீண்ட நாள் சாகுபடியில் இருந்து வளம் குன்றிய நிலம்

புழுதி காடு – புழுதியாக விடப்பட்ட புன்செய்

புண்புலம் – தரிசு நிலம்

புன்னிலம் – வறண்ட பயனற்ற நிலம்

மானாவரரி – மழை நீரால் சாகுபடி

மா – நிலம்

மென்பால் – மருதநிலம்

வறுநிலம் – பாழ்நிலம்

விடுநிலம் – தரிசு நிலம்

மெல்லடி புலம்பு – நெய்தல் நிலம்

பார் – கடினமான நிலம்

பற்றுகட்டு – குடியுரிமை நிலம்

பங்கு காடு – கூட்டு பங்கு காடு

பாழ் நிலம் – விளைச்சலுக்கு உதவாத நிலம்

புறவு – முல்லை நிலம்

புறணி – முல்லை நிலம்

விருந்தி – ஒருவர் பிழைப்புக்கு மானிய நிலம்

விதைப்பாடு – குறிப்பிட்ட அளவு விதை விதைப்பதற்குரிய நிலம்

வித்துப்பாடு – குறிப்பிட்ட அளவு விதை விதைப்பதற்குரிய நிலம்

முதை புனம் – நெடுங்காலம் பயன்பாட்டில் உள்ள நிலம்

மானியம் – கோயில் நிர்வாகம் அறச்செயல்கள் போன்றவற்றிற்கு முற்காலத்தில்

வழங்கப்பட்ட வரியில்லாத நிலம்

மனை – வீடு கட்டுவதற்கான நிலம்

போடுகால் – தரிசு நிலம்

பொது நிலம் – பிரிக்கபடாத நிலம்

மஞ்சள் காணி – சீதன நிலம்

பொன்காணி – சீதன நிலம்

பூசாவிருத்தி – கோயிற் பூசைக்கு விடப்பட்ட மானியம்

புறம்போக்கு நிலம் – சாகுபடிக்கு ஏற்றவை அல்ல (அ)பொது பயன்பாட்டிற்கு விடப்பட்ட தீர்வை, விதிக்கப்படாத நிலம்.

புறம் – இறையிலி நிலம்

புறவு – அரசனால் அளிக்கப்பட்ட மானிய நிலம்

பிரம்ப தேயம் – பிராமணர்க்கு தரப்பட்ட மானிய நிலம்

பாதவக்காணி – கோயில் பணியாளர்களுக்கு படியாக தரப்பட்ட நிலம்

படிபுறம் – கோயில் அர்ச்சகருக்கு அளிக்கப்படும் மானிய நிலம்

வெட்டுகாடு – திருத்தியமைத்த காட்டு நிலம்

வேலி – நிலம்

வெங்கள் மண் – சூரிய வெப்பத்தால் சூடேறிய மண்

தர்காசி நிலம் – தரிசு நிலம்

என்று இன்னும் பல்வேறு சொல்லி கொண்டே போகலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *