Published by : KAMESH KANNAN (வெற்றி யுகம்/Vetri Yugam)
(We have Researched and Collected the Materials and Published in the Blog)
1)தமிழ்நாட்டில் தமிழில் மட்டும்தான் கிரய பத்திரங்கள் பதியபடுகின்றன என்று பலர் நினைத்து கொண்டு இருக்கலாம்.ஆனால் பல மொழிகளில் பதியபடுகின்றன அவற்றை கீழ்கண்டவற்றில் பார்ப்போம்.
2)அனைத்து மாவட்டங்களில் உள்ள சார்பதிவு அலுவலகங்களில் தமிழ் மொழியில் தான் அதிகமாக கிரைய பத்திரங்கள் எழுதப்படுகின்றன.
3)அதே போல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து சார்பதிவகங்களிலும் ஆங்கிலம் (English )கிரய பத்திரங்கள் தமிழுக்கு இணையாக பயன்படுத்தி நிறைய பத்திரங்கள் ஆங்கிலத்தில் பதிகின்றனர்.
4)தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர் ஆம்பூர் திருப்பத்தூர் வாணியம்பாடி சார்பதிவகங்களில் கிரைய பத்திரங்களில் இஸ்லாமியர்களால் உருது மொழி பயன்படுத்தப்படுகிறது.
5)தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை ,ஓசூர் ,கோயம்புத்தூரில் குன்னூர், அவிநாசி ,மேட்டுப்பாளையம் சார் பதிவர்களில் ஈரோடு மாவட்டத்தில் நம்பியூர், புஞ்சைபுளியம்பட்டி ,தாளவாடி ,சத்தியமங்கலம் ஆகிய சார்பதிவகங்களில் கன்னட மொழி நிறைய பத்திரங்களில் அந்த பகுதியில் வாழும் கன்னட மக்களால் பயன்படுத்தப்படுகிறது.
6)ஊட்டி குன்னூர்,மேட்டு பாளையத்தில் கன்னடம் கலந்த படுகா மொழி பத்திரங்கள் அப்பகுதியில் வாழும் படுகர் மக்காளால் பயன்படுத்தபடுகிறது.
7)தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ,மார்த்தாண்டம், குளச்சல் ,கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஊட்டி ,குன்னூர்,கூடலூர் ஆகிய சார்பதிவகங்களில் மலையாள மொழியில் நிறைய பத்திரங்கள் எழுதபடுகின்றன.
8)ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையம் ,கவுந்தம்பாடி ,நம்பியூர் ,புஞ்சை புளியம்பட்டி, சத்தியமங்கலம் ,தாளவாடி சார்பதிவகங்களிலும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோயம்புத்தூர் உடுமலைப்பேட்டை ,பல்லடம் ,அவிநாசி ,கிணத்துக்கடவு ,சூலூர் ,தாராபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள சார்பதிவகங்களலும் விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் ,சாத்தூர் சார்பதிவகங்களிலும் ,மதுரை மாவட்டத்தில் பழனி ,கொடைக்கானல் சார்பதிவகங்களிலும் தர்மபுரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை ,ராயக்கோட்டை கிருஷ்ணகிரி ,தர்மபுரி ,ஓசூர் ஆகிய சார் பதிகங்களில் வேலூர் மாவட்டத்தில் பள்ளிகொண்டா ,ராமகிருஷ்ண ராஜு பேட்ட , வாணியம்பாடி ,காட்பாடி ,குடியாத்தம் ஆகிய சார்பதிவகங்களிலும் தெலுங்கு மொழியில் கிரய பத்திரங்கள் பயன்படுத்த படுகின்றன.
9)தமிழ்நாட்டில் தமிழ்,ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக தெலுங்கு மொழியிலதான் பத்திரங்கள் பதியபடுகின்றன,அதற்கு அடுத்து கன்னடம் மலையாளம் உருது என்று பதியபடுகின்றன.
10)பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்துகின்ற மொழியில் பத்திரபதிவு செய்யலாம் ஆனால் அந்த மொழி சார்பதிவாளருக்கு தெரிந்து இருந்தால் அவர் மனநிறைவு அடைவார்.எப்படி இருந்தாலும் மேற்படி பத்திரத்தின் மொழிபெயரப்பை தமிழிலோ ஆங்கிலத்திலோ பதிவு செய்யும் பத்திரத்துடன் இணைத்து கொடுக்க வேண்டும்.
11) நீங்கள் மேற்படி வேறு மொழி பத்திரங்களின் அடிப்படையில் பத்திரம் வாங்குவது என்றால் அந்த மொழியில் பரிச்சயம் உள்ள சட்ட வல்லுனர்கள் கருத்தை பெற்று சொத்து வாங்கும் முடிவுகளை எடுக்கவும்.
Published by : KAMESH KANNAN (வெற்றி யுகம்/Vetri Yugam)
(We have Researched and Collected the Materials and Published in the Blog.)