தீராத தலைவலி தரும் இரட்டை ஆவண குளறுபடிகள்! நிலம் வாங்குபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள்!

தீராத தலைவலி தரும் இரட்டை ஆவண குளறுபடிகள்! நிலம் வாங்குபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள்!

Published by : KAMESH KANNAN (வெற்றி யுகம்/Vetri Yugam)

(We have Researched and Collected the Materials and Published in the Blog.)

ஒரு சொத்துக்கு இரண்டு உரிமையாளர்கள் இரண்டு ஆவணங்கள் இருக்கும். இரண்டுமே ஒரிஜினல் பத்திரங்கள் தான். இரண்டு பேருமே முத்திரை தாள் வாங்கி பத்திரம் எழுதி சார்பதிவத்தில் பத்திரபதிவு சட்டபடி பதிவு செய்து இருப்பார்கள். இரண்டு உரிமையாளரும் சண்டையிட்டு கொண்டு இருப்பார்கள்.

மேற்படி பத்திரம் டபுள் டாகுமென்ட் (இரட்டை ஆவணம் ) என்று நாங்கள் சொல்வோம்! இதனை போலிப்பத்திரத்தோடு குழப்பி கொள்ளுதல் கூடாது. போலி ( டுப்ளிகேட் டாகுமென்ட்) பத்திரம் என்பது பத்திர ஆபீஸில் பதிவு செய்யாமல் ஒரு பத்திரத்தை புதியதாக இன்னொரு நகல் தயார் செய்வது ஆகும்.

1985 க்கு முன்பு ஒரு நபர் கிரையம் வாங்கி இருப்பார், ஆனால் அந்த உரிமையாளர் பெயர் 1985ல் நடந்த நிலவரி திட்ட சர்வேயில் அச்சொத்தை வாங்கியவர் பெயர் ஏற்றப்படாமல் அந்த சொத்தை விற்றவருடைய பெயரோ அல்லது அவரது வாரிசுகளின் பெயரோ யூடிஆர் அ.பதிவேட்டில் ஏறி இருக்கும்.

1985 க்கு முன்பு சொத்தை வாங்கியவர் பத்திரத்தை மட்டும் வைத்துக்கொண்டு பட்டா வேறு பெயரில் இருப்பதை அலட்சியமாக நினைத்துகொண்டு அதனை மாற்றாமல் இருப்பார். பிறகு சொத்தை விற்றவர்கள் தங்கள் பெயரில் பட்டா இருப்பதை பயன்படுத்தி தங்கள் குடும்பத்திற்குளே ஒரு செட்டில்மெண்ட் பத்திரமோ அல்லது வேறு நபருக்கு கிரைய பத்திரமோ பத்திர ஆபீஸில் வைத்து போட்டுவிடுவர்.

பத்திர ஆபீஸில் எப்படி ஏற்கனவே பத்திரம் போட்ட சொத்தை மீண்டும் பத்திரம் போடுகிறார்கள் என்று நீங்கள் கேட்பது தெரிகிறது? 1985க்கு, முன் கிரையம் வாங்கிய போது, பதிவு நடவடிகைகள் கணினி மயம் ஆகவில்லை. அவை மேனுவல்

மேனுவல் காலத்து EC யை பத்திரம் பதிவு செய்யும் போது இணைத்து வைத்து இருக்க வேண்டும், மேற்படி ECயை பார்த்து சொத்து உரிமை மாற்றத்தில் சரியான லிங்க இல்லை என்று பத்திரம் போட முடியாது என்று சார்பதிவாளர் சொல்லி இருக்க வேண்டும்.

வேலை பளுவிலோ , கவன குறைவிலோ பட்டா, சிட்டா ,அ. பதிவேடு நகலை பார்த்து அதுவே போதுமானது என்ற நினைப்பிலோ பத்திர பதிவிற்கு ஒத்து கொண்டு பத்திரங்களும் போட்டுவிடுவர்.

இதே போல் நத்தம் இடங்களிலும் 1995க்கு நத்தம் சர்வேக்கு முன் கிரையம் வாங்கியவருடைய பெயர் நத்தம் சர்வேயின் போது கொடுக்கபடும் நத்தம் பட்டாவில் வராமல் சொத்து விற்றவர் பெயரே நத்தம் பட்டாவில் வந்து விடும்.

அதன் பிறகு மேலே யூ.டி.ஆர் பட்டாக்கு எப்படி இரண்டு பத்திரம் ஆனதோ அதே போல் இதற்கும் இரட்டை ஆவங்கள் (டபுள் டாகுமென்ட்) ஆகிவிடும். பிறகு இரண்டு தரப்பும் நீதிமன்றங்களுக்கு அலைந்து கொண்டு இருப்பார்கள்.

மேற்படி இரட்டை ஆவணங்கள் பெருகுவதற்கு பெரும்பாலும் காரணம் யூ.டி ஆர் சர்வேயின் போதும், நத்தம் சர்வேயின் போதும் அதில் வருவாய் துறையினர் தவறுதலாக பழைய உரிமையாளர் பெயரையோ ஆவணபடுத்தியது! அதன் பிறகு பத்திரம் போட வரும் போது பத்திர ஆபீஸில் ஆழ்ந்த விழிப்பு இல்லாமல் இரண்டாவது பத்திரத்தை போடுவதற்கு அனுமதிப்பது என இரண்டு துறையினர் அலட்சியங்களாலே டபுள் டாகுமெண்ட் உருவாகிறது.

மேலும் அரசு எந்திரத்தின் தவறுகளை பன்படுத்தி கொள்ளும் சுயநலமுள்ள மக்களாலும் உண்மையாக சொத்து வாங்கிய அப்பாவிகள் பாதிக்கபடுகிறார்கள்.

அடுத்ததாக பொது அதிகாரம் வைத்து இருப்பவர் ஒருவருக்கு கிரயபத்திரம் கொடுத்து விடுவர். பொது அதிகாரம் கொடுத்த முதல்வரும் அதே சொத்தை வேறு நபருக்கு விற்று விடுவார்கள். அதனால் ஒரு சொத்தில் இரட்டை ஆவணங்கள் வந்து விடுகிறது.

ஒரு சார்பதிவாக எல்லையில் பொது அதிகாரம் கொடுக்கப்படுகிறது. அந்த அதிகாரத்தை வைத்து கொண்டு வேறு மாவட்ட சார்பதிவகத்தில் வேறு ஒரு சொத்துடன் அதிகாரம் வாங்கிய சொத்தையும் இணைத்து வேறு மாவட்டத்தில் பத்திரம் போட்டு விடுவார்கள்.

பிறகு அதிகாரம் கொடுக்கும் முதல்வர் அதிகாரத்தை இரத்து செய்துவிட்டு, வேறு ஒருவருக்கு விற்று விடுவார். வேறு மாவட்டத்தில் ஏற்கனவே பதிவான விஷயங்கள் எதுவும் சொத்து வாங்கியவருக்கு தெரியாது. கொஞ்சநாள் கழித்து வேறு மாவட்ட பத்திரத்தை வைத்து உரிமை கொண்டாட இன்னொரு நபர் வரும் போது தான் சொத்தில் இரட்டை ஆவணம் இருப்பதே தெரிய வருகிறது.

ஒரு பொது அதிகாரம் கொடுக்கப்பட்டு, அந்த பொது அதிகாரத்தை இரத்து செய்தல் என்ற நிகழ்வு இருந்தாலே வேறு சார்பதிவாகத்தில் பழைய அதிகாரத்தை வைத்து ஏதாவது பத்திரம் போடபட்டு இருக்கிறதா என்று ஆராய்தல் வேண்டும்.

500 மனைகள், 1000 மனைகள் இருக்கும் வீட்டுமனை பிரிவுகளில் இரண்டு வருடத்துக்கு முன்பு விற்ற மனையை இரண்டு வருடம் கழித்து வேறு நபருக்கு கிரையம் போட்டு கொடுக்கின்ற நிகழ்ச்சியும் பல இடங்களில் நடக்கிறது.

மேற்படி மனைபிரிவு டெவலப்பரிடம், வாடிக்கையாளருக்கு விற்ற மனை, விற்காத மனை என விவர பட்டியல் ஒழுங்காக பராமரிப்பு இல்லாததும், சார்பதிவகத்தில் நிறைய பத்திரமும் கூட்டமும் நிற்கின்ற காரணத்தினாலும் அவசர கோலத்தில் EC யை கவனிக்காமல் இரண்டாது ஆவணத்திற்கு அனுமதியளித்துவிடுகின்றனர்.

அடுத்ததாக சொத்தை தன் மகனுக்கோ,மகளுக்கோ, செட்டில்மெண்ட் பத்திரம் எழுதி பத்திர ஆபீஸில் பதிந்து விடுவர் செட்டில்மெண்ட் எழுதி வாங்கிய மகனோ மகளோ மேற்படி சொத்தை வேறு ஒரு நபருக்கு விற்றுவிட்டு இருப்பர்.

கொஞ்ச காலத்திற்கு பிறகு செட்டில்மெண்ட் எழுதி கொடுத்த தந்தை செட்டில்மெண்ட் பத்திரத்தை இரத்து செய்துவிட்டு வேறு நபருக்கு கிரயம் போட்டு விடுவர். ( இப்பொழுது தான் செட்டில்மெண்ட் பத்திரம் இரத்து செய்ய கூடாது என்ற பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகளின் மூலம் பத்திர ஆபிஸில் செட்டில்மெண்டை இரத்து செய்வது இல்லை) இதன் மூலமும் இரட்டை ஆவணங்கள் உருவாகிவிடுகிறது.

யூ.டி.ஆர். நத்தம் நிலவரி திட்ட பட்டா பெயர் சிக்கல்கள், பொது அதிகாரம், செட்டில்மெண்ட், அதிக மனைபிரிவுகளை விற்கும் மனை நிறுவனங்கள் ஆகியவற்றில் தான் அதிக அளவு இரட்டை ஆவணங்கள் உருவாக்கின்றன.

இப்படி உருவாகும் இரட்டை ஆவணங்களால் அப்பாவி மக்கள், நீதிமன்றங்களில் வழக்கு போட்டு வக்கீலிடம் தனது சேமிப்பு பணத்தை இழந்து நேரத்தை தொலைத்து நின்று கொண்டு இருக்கிறார்கள். இனி நீங்கள் சொத்து வாங்கும் போது இரட்டை ஆவணங்கள் உருவாவதற்கு மேற்கண்ட வாய்ப்புள்ள ஆவணங்கள் இருந்தால் தீர விசாரித்து வாங்குதல் வேண்டும்.

2 thoughts on “தீராத தலைவலி தரும் இரட்டை ஆவண குளறுபடிகள்! நிலம் வாங்குபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள்!

  1. நில அளவை பற்றிய குறிப்புகளை தாருங்கள் சார்.புல,ஏர்,போன்றவற்றிற்கு விளக்கம் வேண்டுகிறேன்.நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *