உயிலில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள்

Published by : KAMESH KANNAN (வெற்றி யுகம்/Vetri Yugam)

(We have Researched and Collected the Materials and Published in the Blog)

உயில் எழுதுவது ஒருவரது அடிப்படை உரிமையாக கருதப்படுகிறது. அது அவர்களின் கடைசி ஆசையாகவும் கருதப்படுகிறது. அதனால் வாழ்வின் இறுதி கால கட்டத்தில் உயில் எழுதுபவர் இருப்பார்கள் என்பதால் பதிவு செய்யப்படாத உயில் அல்லது முன்னிலையில் உயில்கள் எழுதப்படுகின்றன.அவற்றை சட்டமும் அனுமதிக்கின்றது.

சட்டம் உயிலை பதிவு செய்யப்பட தேவை இல்லை என்று சொல்கிறது. ஆனால் பத்திரபதிவு அலுவலகங்களிலும் , வருவாய்துறையில் பட்டா மாற்றுவதற்கும் மேற்படி பதிவு செய்யபடாத உயிலை, ஏற்றுகொள்ள உண்மைதன்மை இல்லாமல் இருக்குமோ என்பதற்காகக மறுக்கிறார்கள்.

இன்றைய சூழலில் சொத்துக்கள் மீது மோகங்கள் அதிகமாக இருப்பதாலும் நிலங்கள் விலையுயர்ந்து நிற்பதாலும் உயில்கள் கட்டாயம் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்ற சட்டம் வந்தால் மிகவும் பயனுள்ள குழுப்பம் இல்லாத நடைமுறை மக்களிடையே நிலவும்.

மேலும் பத்திர அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட உயில்கள் EC யில் காட்டாது. EC யில் சர்பதிவக புத்தகம் 1 இல் மட்டும் இருக்கும் பதிவுகளை மட்டும் தான் காட்டும் . உயில் பதிவை EC யில் காட்டுவதற்காக புத்தகம் 1 இல் உயிலை காட்டலாம். இதேபோல்தான் 2010க்கு முன்பு பொது அதிகார பத்திரம் EC யில் காட்டபடாமல் இருந்தது.இதனை பயன்படுத்தி போலி ஆவணங்கள் உருவாகியதால் பொது அதிகாரத்தை 2010 பிறகு EC யில் காட்ட ஆரம்பித்தனர்.அதேபோல் உயிலையும் EC யில் காட்டினால் சொத்தில் உயில் மூலம் வில்லங்கங்கள் இருந்தால் தெரிய வரும் மக்களுக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும்.

அடுத்து சென்னையை சுற்றி உள்ள சொத்துக்களை உயில் எழுதினால் அதனை நீதிமன்றத்தில் மெய்தன்மை நிரூபணம்(Probation)செய்ய வேண்டும் என்று சட்டம் சொல்கிறது.

அப்பொழுது வெள்ளையர்கள் சென்னையை சுற்றி அதிக அளவு இருந்ததால் நிறைய உயில்கள் பதிவு செய்யபடாமல் எழுதி இருந்தார்கள்.அவர்களுக்காகவஅதனை நிரூபிக்க அந்த மெய்தன்மை நிரூபணம் (PROBATION) தேவைப்பட்டது.ஆனால் இப்பொழுது சார்பதிவகத்தில்

பதிவு செய்யப்பட்ட உயில்களையும், சென்னை சொத்துக்கள் என்றால் மெய்தன்மைநிரூபணம் செய்ய வேண்டும் என்பது மக்களுக்கு இரண்டு வேலையாக மாறுகிறது.

அதனை குறைக்க சட்ட அறிஞர்கள் விவாததிற்கு கொண்டு வரலாம். பதிவு செய்யப்படாத உயில்களை மட்டும் மெய்தன்மை நிரூபணம் நீதிமன்றத்தில் செய்யப்பட வேண்டும் என்றும் , அதுவும் சென்னை மட்டும் இல்லாமல் தமிழகம் முழுவதும் இருக்கின்ற சொத்துக்களுக்கு அதனை செய்ய வேண்டும் என்று இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இதனையும் சட்ட அறிஞர்கள் ஆய்வு செய்து மக்களுக்கு ஏற்றவாறும் தற்கால சூழலுக்கு ஏற்றவாறு மாற்றினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *