Published by : KAMESH KANNAN (வெற்றி யுகம்/Vetri Yugam)
(We have Researched and Collected the Materials and Published in the Blog.)
- சர்வே இரண்டு பிரிவுகளாக மாநில அரசு பிரிக்கிறது.
- நில அளவை துறை
- நில வரிதிட்ட துறை
- புலப்படம், கிராம வரைபடம் எல்லாம் நில அளவை துறையினால் தயாரிக்கப்படுகிறது.
- “அ” பதிவேடு (A. Register) நில வரி திட்ட துறையினரால் உருவாக்கப்படுகிறது.
- மாநில அரசின் நில அள வைகளை நகர நில அளவை , நத்தம் நில அளவை, மலை கிராம நில அளவை, மறு நில அளவை, வட்ட அளவில் நாள் தோறும் நடைபெறும் பட்டா மாறுதல் சம்மந்தமான நில அளவைகள் என பிரிக்கப்படுகிறது.
- கிராம வரைபடம்,
- 2. D ஸ்கேட்ச் ( நன்செய், புன்செய், மானவளி, நத்தம், புறம்போக்கு பகுதிகளை பிரித்து காட்டும் வரைபடம்)
- புலப்படம்
- சர்வே கற்கள் பதிவேடு
- டிப்போ பதிவேடு ( கிராமத்தில் இருக்கும் ஸ்டாக் வைக்கப்பட்ட கற்கள், நில அளவை சங்கிலி உட்பட உபகரணங்கள் இருக்கும் டிப்போ ) போன்ற ஆவணங்ள் கிராம நில அளவையில் இருக்கும்.
- ஒவ்வொரு நில உரிமையாளரும் சர்வே செய்து போடப்பட்ட கற்களை பராமரிக்க வேண்டும். எல்லை கல்லை பாதுகாப்பது , அந்த கல் தொட்டு கொண்டு இருக்கும் புலன்களுடைய பட்டாதரரின் கூட்டு பொறுப்பு ஆகும்.
- மத்திய அரசினால் ஆறுகள், ஏரிகள், மலைகள், சாலைகள் கோவில்கள் விளக்கி காட்டி ஸ்தல சர்வே செய்வார்கள், இவை கனிம வள ஆராய்ச்சிக்கு மிகவும் பயன்படும்.

Published by : KAMESH KANNAN (வெற்றி யுகம்/Vetri Yugam)
(We have Researched and Collected the Materials and Published in the Blog.)








