நடைமுறையில் இல்லாத ஆனால் இப்பொழுதும் தேவைபடுகிற யுடிஆருக்கு முந்நைய 6 ஆவணங்கள்

Published by : KAMESH KANNAN (வெற்றி யுகம்/Vetri Yugam)

(We have Researched and Collected the Materials and Published in the Blog)

இப்பொழுதும் தேவைபடுகிற UDR யுடிஆருக்கு முந்நைய 6 ஆவணங்கள்.

1)S.L.R எஸ்.எல்.ஆர் ஆவணம்

செட்டில் மெண்டு லேண்டு ரிக்கார்டு என்பதன் சுருக்க சொல் தான் SLR ஆகும். வருவாய்துறையில் 1920 க்கு முன் தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் செட்டில்மெண்டு சர்வே முடிந்த பிறகு உருவாக்கபட்ட நில உரிமையாளர் பெயர் பட்டியல் நிலத்தின் வகை மண்வயணம் விதிக்கபட்ட வரி அதன் பரப்பு உட்பட அனைத்து விவரங்களும் அதில் இருக்கும்.

அதன் பரப்பின் அலகுகள் பிரிட்டிஷ் இம்பாரியல் சிஸ்டம் என்பதால் ஏக்கர் செண்டு கணக்குகளில் பரப்பு இருக்கும். இது தமிழகத்தில் 1920 என்று ஒரே ஆண்டில் உருவாக்கபட்ட கணக்கு அல்ல!! சில ஊரில் 1913, சில ஊரில் 1905, சில ஊரில் 1911 என்று வேறு வேறு ஆண்டுகளில் செட்டில்மெண்டு ரிக்கார்டு உருவாக்கபட்டு இருக்கும். ஒரே ஆண்டில் தமிழ்நாட்டை முழுவதும் செட்டில்மெண்டு சர்வே செய்து பெயர் பட்டியல் தயாரிக்க முடியாது என்பதை புரிந்து கொள்ளலாம். இதனை பைசலாதி ரிஜிஸ்டர் என்றும் சொல்லுவார்கள்.

2) RSLR ரீ செட்டில்மெண்டு லேண்ட் ரிக்கார்டு:

எஸ்.எல்.ஆரில் நில உரிமை முறையில் ஜமீன் இனாம் நிலங்கள் என்ற மேலவாரி நில உரிமை முறை இருந்திருக்கும். 1947 இல் இருந்து 1960 வரை படிபடியாக ஜமீன் மிட்டா மிராசு இனாம்தாரர் (நிலவரிகட்டாமல் சொத்தை அனுபவிக்கும் இராணுவ படைவீரர்கள் கோயில் பிராமணர்கள்) ஆகிய முறைகள் ஒழிக்கபட்டது அதன் பிறகு குடிவார உரிமையில் உள்ளவர்கள் பட்டாதாரர்கள் ஆனார்கள் இது போல பெரிய மாற்றங்கள் நடந்த கிராமங்களில் மீண்டும் ரீ சர்வே நடந்தது அதற்கு ரீசெட்டில்மெண்டு லேண்ட் ரிக்கார்டு என்று பெயர் சுருக்கமாக RSLR ஆவணம் என்று சொல்வோம் இதிலும் நில உரிமையாளர், என்ன வகையான நிலம் பரப்பு பிரிட்டிஷ் அளவுகளில் ஆதாவது ஏக்கர் செண்டு அளவுகளில் இருக்கும்.

3) செட்டில்மெண்டு புலப்படம்:

நாம் தற்போது பயன்படுத்தும் fmb புலப்படம் யுடிஆர் புலப்படம் ஆகும். அதில் அளவுகள் எல்லாம் மீட்டர் என்ற மெட்ரிக் அளவுகளில் இருக்கும். ஆனால் செட்டில்மெண்டு ரிக்கார்டு புலப்படம் fmb என்பது லிங்க் மற்றும் செயினில் இருக்கும் அதாவது இம்பீரியல் பிரிட்டிஷ் சிஸ்டத்தில் இருக்கும். அளவு பிழைகள் பிரச்சினை வரும்போது நமக்கு இந்த செட்டில்மெண்டு கால புலபடம் தேவை. மேலும் எப்பொழுது உங்களின் பார்வைக்கு புலப்படம் வந்தாலும் அதனுடைய அலகுகள் மீட்டரா லிங்கா என்று பார்க்க வேண்டும் , புலபடத்தின் கீழே அதனுடைய அலகு விவரம் கட்டாயம் போட்டு இருப்பார்கள்.

4)தாசிலதார் செட்டில்மெண்டு ரிக்கார்டு:

பெரும்பாலும் இனாம் நிலங்களில் (கோவில்,பிராமணர்,முதலியார்களின் மேல்வார உரிமை) குடிவார உரிமையில் இருந்தவர்களுக்கு அரசு அந்த நிலத்தை ஒரு தொகை வாங்கி விட்டு அவர்களிடமே ஒப்படைத்தது இது பெரும்பாலும் 1970 களில் நடந்தது. அப்பொழுது தாசில்தார் ஒரு ஆவணம் கொடுப்பார். அதுதான் தாசில்தார் செட்டில்மெண்டு ரிக்கார்டு அதற்காக கொடுக்கப்படும் தொகை நியாய வார தொகை என்று சொல்வார்கள்.

5)பி ரெஜிஸ்டர் ரிக்கார்டு:

செட்டில் மெண்டு காலத்தில் இருந்து யுடிஆரில் பயன்படுத்தாமல் விட்ட ரிக்கார்டுதான் பி ரெஜிஸ்டர் ஆகும். A ரெஜிஸ்டரில் நிலவரி கட்டுபவர் பெயர் இருக்கும் பி ரெஜிஸ்டரில் நிலவரி சலுகை பெற்ற இனாம் நில பயனாளிகள் (முதலியார்கள்,பிராமணர்கள் மற்றும் கோவில்கள்) பெயர் இருக்கும். தற்பொழுது இனாம்நில உரிமை சிக்கல்கள் பல எழும்புகின்றன. பல உரிமை பிரச்சினைகள் நீதிமன்றத்தில் நிரூபிக்க இந்த ஆவணங்கள் தேவைபடுகிறது .

6)பிரெஞ்சு கதாஸ்தர் ரிக்கார்டு:

தமிழ்நாடு ஆங்கிலேயர் கட்டுபாட்டில் இருந்தது .ஆனால் காரைக்கால், பாண்டிசேரியில் பிரெஞ்சு கட்டுபாட்டில் இருந்தது அங்கு 1920 களில் சர்வே செய்து நில ஆவணங்களை உருவாக்கினார்கள். அந்த சர்வே முறைக்கு கதாஸ்டரல் சர்வே முறை என்று பெயர் அதனால் அதனை கதாஸ்ட்ரல் ரிக்கார்டு என்று சொல்வார்கள். பிரெஞ்சு இந்தியாவில் செட்டில்மெண்டு ரிக்கார்டு இருக்காது. அங்கு ஜமீன்களும் இல்லை பெரிய இனாம்களும் இல்லை மேல்வார உரிமை முழுதும் பிரெஞ்சு கவர்னர் கட்டுபாட்டில் தான் இருந்தது.

இன்றும் பாண்டிசேரியில் பட்டா மாற்றம் செய்ய வேண்டும் என்றால் கதாஸ்டரல் ஆவணத்தோடு பொறுத்தி பார்க்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் அப்படி நடைமுறையில் இல்லை! அப்படி நடைமுறைக்கு கொண்டு வந்தால் பலருக்கு டைட்டில் உட்காராது . மேலும் கதாஸ்டரல் ஆவணம் 1920 களிலேயே மெட்ரிக் அளவுகளில் உள்ளது . எனெனில் மெட்ரிக் அளவுமுறையை பிரெஞ்சுகாரர்கள் தான் கண்டுபிடித்து இருக்கிறார்கள். என்பதை நினைவில் கொள்ளுதல் வேண்டும்இவைதான் தாங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய யுடிஆருக்கு முந்தைய ஆறு வருவாய்துறை ஆவணங்கள் ஆகும்.

One thought on “நடைமுறையில் இல்லாத ஆனால் இப்பொழுதும் தேவைபடுகிற யுடிஆருக்கு முந்நைய 6 ஆவணங்கள்

  1. Neend kalangalaga arinthukollamudiyatha migavum payanulla Nila vivarangalai thangalmoolam therindthu kondathai enni miguntha santhosam indru kidaithathu Thank You very much Sir

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *