Surveyசர்வே என்றால் என்ன? சர்வேக்கள் பல வகை

சர்வே என்றால் என்ன? சர்வேக்கள் பல வகை

Published by : KAMESH KANNAN (வெற்றி யுகம்/Vetri Yugam)

(We have Researched and Collected the Materials and Published in the Blog.)

சர்வே (Survey)என்பது ஒரு அற்புதமான கலை நிலத்தையோ வானத்தையோ கடலையோ படுக்கையான நீளத்தை அகலத்தை பலவிதமான கணிதமுறையில் பலவிதமான உபகரணங்கள் கொண்டு அளப்பது ஆகும்.

அதுவே செங்குத்தளவு உயரங்களை பல்வேறுவிதமான உபகரணங்களை கொண்டு பல்வேறுவிதமான கணிதமுறையில் அளப்பதும் சர்வே தான் ஆனால் அதற்கு வேறு தொழிலநுட்ப பெயர் லெவலிங் (Levelling) என்று சொல்வார்கள்.

மேற்படி சர்வே மற்றும் லெவல்லிங் முறையில் அளப்பதை ஒரு கைக்கு அடக்கமான தாளில் வரைபடம் ஆக உருவாக்கி தருவதே சர்வேவின் குறிகோள்!

மேற்படி வரைபடத்தை பிளான் என்றும் மேப் என்றும் நாம் அழைக்கிறோம் மிகச்சிறிய அலகுகளில் (அளவுகளில்) மினியேச்சர் செஞ்சு வரைபடம் வரைந்தா அதற்கு பெயர் மேப் (Map).

கொஞ்சம் பெரிய அலகுகளில் (அளவுகளில்) வரைபடம் உருவாக்கினால் அதற்கு பெயர் பிளான். மேப்பிக்கு நம்ம இந்திய வரைபடத்தையும், பிளானிற்கு நமது டிடிசிபி அப்ரூவடு பிளானையும் சொல்லலாம்.

சர்வே உண்மையில் பல வகை இருக்கிறது அவற்றையெல்லாம் சுருக்கமாக பார்ப்போம்.

சர்வேயில் மொத்தம் மூன்று புலம் (Filed) இருக்கிறது. சர்வேயர்கள் பட்டா மாற்றும் போது full field ஆ உட்பிரிவு இனமா என்ற வார்த்தைகளை சொல்வார்கள் நிறைய பேருக்கு field புலம் என்றால் நிலம் மட்டும் என்று நினைக்கிறார்கள்

சர்வேவில் புலம் மூன்றாக இருக்கிறது,ஆம் வானத்தில் இருக்கிற நட்சத்திரக் கூட்டங்களை சர்வே செய்து வரைபடம் தயாரிப்பது Astronomical survey என்று சொல்வார்கள். இந்த சர்வேயில் புலம் (filed ) என்றால் ஆகாயம்
அதேபோல கடலின் மேற்பரப்பு , கடலின் ஆழத்தில் எண்ணெய் வள ஆராய்ச்சிக்காக கடலை அளந்து வரைபடம் தயாரிப்பது Hydrographic Surveys என்று சொல்வார்கள் இதில் புலம்(Filed) என்றால் தண்ணீர்.
பூமியின் மேற்பரப்பை அளந்து காடு மலை நிலங்கள் என சர்வே செய்வது வரைபடம் தயாரிப்பது land surveys என்று சொல்வார்கள் இதில் புலம் (filed) என்றால் நிலம் ஆக மூன்று சர்வே ஃபீல்டு இருக்கிறது.

நாம் பார்க்க போவது நில சர்வேதானே அந்த நில சர்வேவிலும் பல விதங்கள் இருக்கிறது. அவைகளை இனி சுருக்கமாக பார்க்கலாம். நில சர்வேக்களில் பூமியின்மேல் உள்ள இல் இருக்கிற பலவிதமான பொருட்களை ஆய்வு செய்வதற்கும் பெயர் ஐ இயோலஜிகல் சர்வே (geological survey) என்று பெயர்

பூமியின் கீழடுக்குல் உள்ள கனிமவளங்கள், தாதுக்கள், நிலக்கரி, எரிவாயு போன்றவற்றை நிலத்தின் மீது ஆய்வு செய்வதற்கும் (mine survey ) என்று சொல்லுவார்கள்.

geological survey ஜியோலஜிகல் சர்வேயில் அதிகபட்சமாக பூமியின் மேற்பரப்பை அளப்பதும் நம்ம தோட்டத்துக்கு எப்படி நாலு மூலையிலும கல்லு போட்டு மார்க் செஞ்சி வைக்கிறோமோ அது போல உலகத்தையே அங்கே அங்கே ஒரு மார்க் செஞ்சு வைக்கிறாங்க.அதுக்கு கன்ட்ரோல் ஸ்டேசன் என்று பெயர் கொடுத்து இருக்கிறார்கள்.

சர்வே இல் நிறைய ஸ்டேசன் என்ற வார்த்தைகள் வரும் ஸ்டேசன் என்றாலே போலிஸ் ஸ்டேசதான் நினைவுக்கு வரும் ஆனால் சர்வேயில் ஸ்டேசன் என்றால் பாயிண்ட் என்று சொல்லுவார்கள்.

இந்த சர்வே ஸ்டேசன்கள் இந்தியா மற்றும் உலகம் முழுக்க வலைபின்னல் போல இருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் இந்தியாவுக்குள் மட்டும் தற்போது பாரப்போம் இந்தியாவையே பல பெரிய முக்கோணங்களாக பிரித்து இருக்கின்றனர். இந்த முக்கோணத்தின் ஒரு பக்கம் மட்டும் சுமார் 500 கிமீ இருந்து 900 கிமீ வரை இருக்கும் என்றால் இந்த முக்கோணத்தின் ஒவ்வொரு பாயிண்டும் பெரும்பாலும் மலைகள் போன்ற உயரமான இடத்தில் இருக்கும் அதனை ஜி.டி.ஸ்டேசன் (Great Trigonometrical Station) என்று சொல்வார்கள், மலையோ கோபுரமோ இல்லாத இடத்தில் உயரமாக மேடை கட்டி அதில் இந்த சர்வே கல்லை நட்டு வைத்து இருப்பாரகள்

இப்படி உருவாக்கபட்ட சர்வே ஸ்டேசன்களை அடிப்படையாகவும் எல்லையாகவும் வைத்துதான் நிலத்திற்கு மேலே செய்யபடும் எல்லா சர்வேவும் செய்கிறார்கள் அதாவது டோபோகிராபிகல் சர்வே (topographical survey) என்ஜினீரிங் சர்வே (Engineering Survey) கடாஸ்டரல் சர்வே (cadestal survey) மற்றும் இராணுவத்திற்காக தாக்குதல் எதிர்தாக்குதல் பாதுகாத்தல் புள்ளிகளை குறித்தல் சர்வே செய்வதும்,தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொள்ளவும் பழங்கால நினைவு சின்னங்களைகண்டுபிடிக்கும் சர்வேக்களும் செய்ய படுகிறது.
இப்படி பல வகையாக உள்ள ஜியோலஜிகல் சர்வே துறையும் இந்தியா முழுக்க உள்ள ஜிடி ஷ்டேசனும் சர்வே ஆப் இந்தியா என்ற மத்திய அரசு துறையின் கட்டுபாட்டில் இருக்கிறது .
மேற்கண்ட நான் சொன்ன சர்வேக்கள் எல்லாம் மிக முக்கியமானது ஆனால் நிபுணர்களுக்கு மட்டும்தான் புரிய கூடியது சாரதாரண மக்களுக்கு இவ்வளவு பின்புலம் இந்த சர்வேக்களில் இருக்கிறதா என்று தெரியாது
நம்ம மக்களுக்கு தெரிந்ததைல்லாம் நம்ம வயற்காட்டை அல்லது நிலத்தை அளக்க வரும் சர்வேயர் அவர் செய்கின்ற வேலை சர்வே அவ்வளவுதான் தெரியும்.சரிதானே அந்த சர்வேக்கு பெயர் வருவாய்துறை நிலதீர்வைக்கான சர்வே
என்று சொல்கிறோம்
மக்களுக்கு அதுகமாக புழக்கத்தில் நில நிலத்திற்கான சர்வேவை இரண்டாக பிரிக்கலாம்
a) தல சர்வே (Topographical Survey)
b) வருவாய்துறையினருக்கான நிலதீர்வைக்கான சர்வே

ஏரிகள், குளங்கள், நீர்வழிபாதைகள், மலைகள், குன்றுகள், இருப்புப் பாதைகள், சாலைகள் கோவில்கள், இடுகாடுகள், பூங்காக்கள் ஆகியவற்றை எல்லாம் எங்கெங்கே இருக்கிறது என்பதை அதனுடைய அமைவிடத்தை தரக்கூடிய நிலபடம் தான் டோபோஸ்கெட்ச் பொதுவாக நாம் அதனை டோபோ ஸ்கெட்ச்என்று சொல்வோம்.
தல வரைபடம் எல்லாவிதமான ராணுவ காரியங்களுக்கும் எல்லைகளை பாதுகாக்கும் படைகளுக்கும் துணை இராணுவ படைகளுக்கும் வனதுறை பொதுபணிதுறை சுரங்க துறை தொல்பொருள் துறை என நிரவாக வசதிக்காக பயன்படுகிறது .
அடுத்து வருவாய் துறையில் நிலங்களை நஞ்சை புஞ்சை மானாவாரி தரிசு என்று பிரித்து அதனுடைய மண் வளத்தையும் பிரித்து சிறிய முக்கோன அளவுகளாக அல்லது பெரிய பெரிய முக்கோன அளவு பாகங்களாக நிலங்களை சர்வே செய்து பிரித்து கல் போடுவதும் மேலும் நில வரி தீரவைக்காக தண்ணீர் பாசன அடிப்படையில் வரி விதிப்பதும் நிலதீர்வை சர்வே இதனைதான் கதாஸ்டரல் சர்வே என்றும் சொல்கிறாரகள்
மேலும் தமிழகத்தின் நில தீர்வை சர்வேயில் தல சர்வேயின் விவரங்களையும் கிளப் (Club)செய்து இரண்டையும் ஒருங்கிணைத்து மிக கிராம வரைபடங்களை தமிழக சர்வே துறை உருவாக்கியிருக்கிறார்கள்.

இப்போது என்னென சர்வேக்கள் இருக்கிறது என்று பார்ப்போம்.
கனிமவளங்கள், தாதுக்கள் , நிலகரி, எரிவாயு, போன்றவற்றை எல்லாம் ஆய்வு செய்வதும், கணக்கெடுப்பதும் அதற்கான வரைபடங்களை தயார் செய்வதும் MINE SURVEY என்று சொல்வார்கள்.
பழங்கால நினைவு சின்னங்களை, தொல்பொருள் ஆய்வுகளை செய்வதும், குரிப்பெடுப்பதும், ஆவணங்கள் தயாரிப்பதும், ARCHAELOGOCAL SURVEY என்று சொல்வார்கள்.
கடலில் உள்ள கனிமங்களையும் உயிர் சூழ்நிலைகளையும், ஆய்வு செய்வதும், ஆவணபடுதுவதும், HYDROLOGICAL SURVEY என்று சொல்வார்கள்.
வானில் உள்ள நட்சத்திரங்கள், விண்பொருட்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வதும், ஆவணப்படுத்துவதும், ASTROLOGICAL SURVEY என்றும் சொல்வார்கள்.
பூமியின் மேற்பரப்பை அளப்பதும், ஆய்வு செய்வது, ஆவணபடுத்துவது.,. GEODEDIC SURVEY என்று சொல்வார்கள்.
GEODEDIC SURVEY இல் TOPOGRAPHICAL SURVEY , ENGG SURVEY, MINE SURVEY , ARCHAELOGOCAL SURVEY வருகிறது. நாம் படிக்க போகும் நில அளவை சர்வேயும் (கதாஸ்டரல் சர்வே) GEODEDIC SURVEY இல் தான் வருகிறது.
நாம் கற்று கொள்ள போகும் நிலஅளவை சர்வே பாடத்தில் தொழில் நுட்ப பெயரால் கடாஸ்ட்ரல் சர்வே என்று சொல்கிறார்கள். வெகு மக்களுக்கு கடாஸ்ட்ரல் சர்வே என்றால் என்ன என்று தெரியாது.
கொங்கு பகுதிகளில் இன்றும் புல எண்ணுக்கு க.ச .எண் என்பார்கள் ஆனால் அதற்கு விரிவாக்கம் பலருக்கு தெரியாது.கடாஸ்டரல் எண் என்று அரத்தம். அப்படியே பாண்டிசேரிக்கு வந்தால் கதாஸ்டரல் ஆவணங்கள் என்றுதான் சொல்வார்கள் அதற்கு அரத்தமும் பலருக்கு தெரியாது .கடாஸ்டரல் என்பது நிலத்திற்கு வரி விதிப்பிற்காக செய்யும் சர்வே என்று பெயர்.
கொடாஷ்ட்டல் சர்வே என்பது ஒரு ரோமன் நிலவரி திட்ட பெயராகும். அதனையே நாம் இன்றும் பயன்படுத்தி இருகின்றோம். மக்களும் நில சர்வே என்று தான் சொல்கிறார்கள். மக்களின் புழக்க பெயராக நில சர்வே இருக்கிறது.
கடாஸ்டரல் சர்வே என்ற வார்த்தை அனைவரின் வாயிலும் வருவதில்லை. எளிமையாக நில சர்வே என்று சொல்கிறார்கள். நில சர்வே என்று சொல்வதை நாம் கொடாஷ்ட்டல் சர்வே என்று தான் புரிந்து கொள்கிறோம்,இந்த சர்வேக்கெல்லம் எந்த விஷயம் தெளிவாக தெரிந்து வைத்து இருக்க வேண்டும் என்றால் கணக்குதான் கணிதம்தான்.
சர்வே கணிதம் என்பது சாதரணமான விஷயம் அல்ல அற்புதமான ஒன்று . நான் மேலே சொன்ன எல்லா சர்வேக்களும் ஒரே அடிப்படை மற்றும் ஒரே FOUNDATION தான் அது சர்வே கணிதம் தான்
நாம் படிக்கும் காலத்தில் போடுகின்ற கணக்குகளை தான் .எப்படி போட வேண்டும் என்று சொல்லிகொடுகின்றார்களே தவிர ஏன் போடவேண்டும் என சொல்ல மறந்து விடுகின்றார்கள்.
எல்லா சர்வேக்கும் அந்த சர்வே துறையின் ஆவணங்களின் அடிப்படையில் தான் இந்த நாட்டின் நிர்வாகமே இயங்குகிறது. அதனால்தான் படிச்சு IAS ஆகி கலெக்டர் ஆனபிறகும் அவரை சர்வே வை கற்றுகொள்ள மாவட்ட சர்வேயரிடம் வகுப்பிற்கு போகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *