ஹாகா (HACA) லேண்டில் மனை வாங்குகிறார்களா அறிந்து கொள்ள வேண்டிய 17 செய்திகள்

ஹாகா (HACA) லேண்டில் மனை வாங்குகிறார்களா அறிந்து கொள்ள வேண்டிய 17 செய்திகள்

ரியல்எஸ்டேட் தொழிலில் இருப்பவர்கள்மட்டுமே பெரும்பாலும் தெரிந்திருக்கும் வார்த்தை இந்த ஹாகாலேண்டு, இன்னும் சில பாமர ரியல்எஸ்டேட் ஏஜெண்டுகள் இதனை சொல்லும் போது காக்காலேண்டு என்பார்கள். ஆனால் உண்மையில் அது ஹாகாலேண்டு அது நான்கு ஆங்கில வார்த்தையின் சுருக்க வடிவம் ஆகும். அதாவது Hill Area Conservation Authority தமிழில் மலை பகுதி பாதுகாப்பு ஆணையம் என்று சொல்வார்கள்.

1990-களில் மலை பகுதி மற்றும் மலைகளின் கனிம வளம், இயற்கை வளம் என்று அனைத்தையும் பாதுகாக்கும் நோக்கில் தமிழக அரசால் இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த குழுவில் இரண்டு ஐஏஸ்ஆபிசர், டிடிசிபி, நிதி, வனத்துறை, கால்நடை, சுற்றுலா, வீட்டுவசதி, தொழில், கிராமவளரச்சி, குடிநீர், மின்சாரம் போன்ற எல்லா துறைகளிலும் உள்ள அதன் இயக்குநர்கள், அதன் தலைமை பொறியாளர்கள் இந்த ஹாகாவில் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

மேற்படி ஹாகவில் மாவட்ட ஆட்சியர்களில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் மட்டும் உறுப்பினராக இருக்கிறார். மேற்கண்ட அனைவரும் சேர்ந்து தமிழ்நாட்டில் ஒரு 55 தாலுக்காக்களை மலையும் மலை சார்ந்த தாலுகாவாக முடிவு செய்து அதனை காப்பதற்காக கீழ்கண்ட வேலைகளை செய்ய வேண்டும் என்பவர்களை எல்லாம் ஹாகா குழுவில் க்ளியரன்ஸ் பெற வேண்டும் என்று முடிவு எடுக்கபட்டிருக்கிறது.

இந்தஹாகா குழு மூன்று ஆண்டுக்கு ஒரு முறை மலை பகுதிகளை பற்றிரிப்போர்ட் தயாரிக்க வேண்டும், சூழலியலை பாதிக்காத வண்ணம் மலைகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். ஹாலிடேரிசாரட், ஹோட்டல், ரியல்எஸ்டேட், வீடுஎன்றுஎதுகட்டினாலும் 300 சதுரமீட்டருக்கு மேல் சென்றால் இந்த ஆணையத்திடம் அனுமதி வாங்க வேண்டும்.

ஆயில்பைப்லைன், கேபிள்காரர், நெடுஞ்சாலை, அணைகட்டுகள், மின்சாதன உற்பத்திநிறுவனங்கள், இரப்பர்ஆலைகள்,மரம்சம்மந்தபட்டதொழில்கள், காகித தொழிற்சாலைகள், உணவுதொழிற்சாலைகள், வேதியில் தொழிற்சாலை என்று எது ஆரம்பித்தாலும் இந்த ஆணையத்தை கேட்க வேண்டும் என்ற கட்டாயம்இருக்கிறது.

கோழி, ஆடு போன்ற கால் நடை பண்ணைகளுக்கும் காளான் வளர்ப்பு உட்பட விவசாயம் சார்ந்த அக்ரி அடிப்படையிலான தொழில்களுக்கு இந்த ஆணையத்திடம் கிளியரன்ஸ் வாங்கவேண்டும். என்றெல்லாம் இந்த ஹாகா விதி முறையை வடிவமைத்து இருக்கிறார்கள்.

2002 ஆண்டுகளில் ஊட்டியில் HADP (Hill Area Development Authority) என்று ஒன்று இருந்தது ஊட்டியை நன்றாக பாதுகாத்து கொண்டிருந்த அந்த ஆணையத்தை இந்த ஹாகவோடு 2009களில் இணைத்து விட்டார்கள். தமிழ்நாடு திட்டகமிசனின் கீழ் இருந்த மேற்கு தொடரச்சி மலை மேம்பாட்டு புரோகிராம் என்ற திட்டங்களையும் இந்தா ஹாகா ஆணையத்தோடு இணைத்து விட்டார்கள்.
இந்த ஹாகா கட்டு பாட்டில் தமிழக மலைகள் வந்த பிறகு தான் பல மலைகள் பாளம் பாளமாக அறுக்கப்பட்டது. பல மலைகள் காணாமலே போய் விட்டது. மலையில் குடையப்பட்ட பௌத்த சமணகுகையில் உள்ள மலைகள் உடைக்கபட்டன. தண்ணீர் மண் பரிசோதனை செய்ய தான் அனுமதி இல்லாமல் ட்ரிலிங் போட்டு மலையை குடையலாம். எனவே மீதி குடையல் நடந்ததெல்லாம் இந்தஹாகாவின் அனுமதியோடு தான் என்று புரிந்து கொள்ள வேண்டும். இப்படி பல மலைகள் மார்பிள் மார்பிள்களாக குடைந்து எடுக்கபட்டு வெளிநாடுகளுக்கு விற்கபட்டது. இன்னும் பல மலைகள் சேலம் பக்கத்தில் பெரு முதலாளிகளுக்கு காத்து கொண்டிருக்கிறது.

இப்படி ஹாகாவின் அனுமதியுடன் மலைகளையே உடைத்துவிற்கும் பொழுது மலைகளில் இருந்த வியாபாரிகள் மலைகள் முழுவதும் ரிசாரட்டு, டூரிசம், ஹோட்டல் என்றுசக்கைபோடு வியாபாரங்களைசெய்தனர். இதனைபார்த்த எங்களை போலரியல் எஸ்டேட்காரர்களும் மலை மற்றும் மலை அடிவார கிராமங்களில் வீட்டுமனைகளை போட்டு தள்ளு தள்ளு தள்ளு என்று விற்பனையை தள்ளினார்கள்.

ரியல்எஸ்டேட் வியாபாராம் மலைகளில் நடந்துகொண்டு இருந்த பொழுதெல்லாம் கும்பகர்ண உறக்கத்தில் இருந்த ஹாகாஆணையம், எங்களை போன்ற ரியல்எஸ்டேட் ஏஜெண்டுகள் வயிற்றில் அடித்த புண்ணியவான் யானை ராஜேந்திரன் என்பவர் பஞ்சாயத்து அங்கீகார மனைகளை பத்திரபதிவுக்கு தடைசெய்ய சொல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு தடை வாங்கினார்.
அதன் பிறகு அந்த பஞ்சாயத்து அங்கீகார மனைகளுக்கு எல்லாம் வரன்முறைபடுத்தி பணம் கட்டி மீண்டும் பதியலாம் என்று அரசு புதிய உத்தரவை (உத்தரவுஎண்: 78 ) போட்டது. அப்பொழுது தான் மலையிலும் மலைஅடிவாரங்களில் இருக்கும் மனைகளுக்கு அரசு உத்தரவு 78-ன்படி வரன்முறைபடுத்தி மனைகளுக்கு அங்கீகாரம் தரமுடியாது என்று சொன்னார்கள். ஏன்?என்று கேட்கும் பொழுது தான் மலை மற்றும் மலை அடி வாரங்களில் இருக்கின்ற நிலங்கள் எல்லாம் ஹாகாவில் இருக்கிறது என்றார்கள் டிடிசிபி அலுவலக ஊழியர்கள்.

அதுவரை ஹாகாஆணையம் பற்றிபெரிய அளவில் யாரும் கவலைபடாமல் மனைப்பிரிவுகளை போட்டுகொண்டே இருந்தது தவறு என்று உணர்ந்தனர். ஹாகா ஆணைய மும்மலைகளை விற்று கொண்டு இருந்ததால் இந்த பெருகி வரும் மனைப்பிரிவுகளைப் பற்றி கவலைப்படாமல் இருந்தனர். அரசுஉத்தரவு 78க்கு பிறகு தான் ஹாகா பற்றிய விழிப்பு ரியல்எஸ்டேட்காரர்களுக்கும் மலைப்பகுதிகளில் மனைகள் வாங்கியவர்களுக்கும் வந்தது தெரியாது. இப்பொழுது வரை ஹாகா கட்டுப்பாட்டில் மனைபிரிவுகள் போட் ரியல்எஸ்டேட்உரிமையாளர்கள், மனைகள் வாங்கிய சிறிய முதலீட்டாளர்கள் அனைவரும் விவரம் தெரியாமல் மாட்டி கொண்டு திரு திருவென்று விழித்து கொண்டிருக்கிறார்கள்.

எப்பொழுது டிடிசிபி அலுவலகத்திலிருந்து ஹாகாநிலத்தில் உருவாக்கப்பட்ட மனைகளுக்கு வரன்முறைபடுத்துதல் செய்தல் வேண்டும் என்று கேட்டாலும் டிடிசிபி விரைவில் அரசு உத்தரவுவரும் அரசு உத்தரவு போடும் காத்திருங்கள் என்று சொல்லி சொல்லி திருப்பி அனுப்பி கொண்டிருந்தனர். அதன்பிறகு 2020-ம்ஆண்டு மேமாதம் அரசு உத்தரவு ஹாகா நிலத்தில் மனைவரன் முறைபடுத்துதல் பற்றி போட்டிருக்கிறார்கள்.

மேற்படி அரசு உத்தரவு 66ல் மலை பகுதிகளில் இருக்கும் மனை பிரிவுகளுக்கு டிடிசிபி அங்கீகாரம் வரன்முறைபடுத்தி கொள்ளும்படி உத்தரவிட்டிருக்கிறது. அந்த உத்தரவில் யானை வழிதடங்கள் உள்ளமலை கிராமங்கள், நிலசரிவு அதிகம் வாய்ப்புள்ளமலை கிராமங்கள், ஈகோசென்சிட்டிவ் (Eco Sensitive) மலை கிராமங்கள் என்றுவகைபடுத்தி மேற்படி கிராமங்களுக்கு எல்லாம் வரன் முறைபடுத்துதல்படி அங்கீகாரம் வழங்கதடை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 55 தாலுகாக்களில் 595 மலைகிராமங்கள் இருக்கிறது. மேற்படி கிராமங்களில் எந்த கிராமங்களில் மனைகளை வரன்முறைபடுத்தி அங்கீகாரம் பெறமுடியும். எந்தெந்த கிராமங்களில் மனைகளை வரன்முறைபடுத்தி அங்கீகாரம் பெற முடியாது என்ற விவரங்கள் அனைத்தையும். இனி நீங்கள் மலையில் சொத்து வாங்கும் பொழுது எதற்காக சொத்து வாங்க போகிறீர்கள், ஏன் சொத்து வாங்குகிறீர்கள் என்று முடிவு செய்து அவை ஹாகாவில் கிளியரன்ஸ் கிடைக்குமா? என்று முன்கூட்டியே பார்த்துவிட்டு சொத்து வாங்குவது மிகவும் நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *