இரட்டை குடியுரிமை உள்ளவர்கள் தமிழ்நாட்டில் சொத்து வாங்க தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள்!!!

இரட்டை குடியுரிமை உள்ளவர்கள் தமிழ்நாட்டில் சொத்து வாங்க தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள்!!!

Published by : KAMESH KANNAN (வெற்றி யுகம்/Vetri Yugam)

(We have Researched and Collected the Materials and Published in the Blog.)

வெளிநாட்டில் இருந்து கொண்டு தமிழ்நாட்டில் சொத்து வாங்கவேண்டும் அல்லது விற்க வேண்டும் அல்லது வேறு நபருக்கு உரிமையை மாற்ற வேண்டும் என்றாலும் இந்திய அரசாங்கத்தின் வெளிநாடு வாழ் இந்தியர்களின் துறையும் இந்திய ரிசர்வ் வங்கியும் சேர்ந்து சில விதி முறைகளை வகுத்துள்ளது.

அவற்ற தெரிந்து கொண்டால் தான் சரியான நபரிடம் இருந்து நாம் சொத்து வாங்குகிறோமா சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் சொத்து பரிவர்த்தனை நடைபெறுகிறதா? என்று புரிந்து கொள்ளலாம்.

வெளிநாடுகளில் இருந்து சொத்து வாங்கும் இந்தியர்களை நாம் Non-Residential Indian என்று சொல்கிறோம்.அதனை சுருக்கமாக எல்லாரும் NRI என்று சொல்வதை நாம் கேள்விபட்டு இருப்போம்.

NRI என்பவர்கள் இரண்டு வகையானவர்கள்
அவர்கள் இரண்டு வகையான அடையாள அட்டைகளை வைத்து இருப்பார்கள். ஒருகார்டின் பெயர் OCI இன்னொரு கார்டின் பெயர் PIO ஆகும்.

OCI என்பது ஓவர்சீஸ் சிட்டி சன் ஆஃப் இந்தியா (Overseas Citizens of India), PIO என்பது பெர்சன் ஆஃப் இந்தியன் ஆரிஜன் (Person of Indian Origin) என்றும் சொல்வார்கள். பொதுவாக தமிழில் “வெளிநாடு வாழ் இந்தியர்” என்று OCI-யையும் “வம்சாவளி இந்தியர்” என்று PIO-வையும் சொல்வார்கள்.

வெளிநாடு வாழ் இந்தியரை NRI என்று சொல்கிறார்கள். அந்த வார்த்தை பிழையானது NRI-யை “இந்தியாவில் வசிக்காத இந்தியர்கள்” என்று தான் சொல்ல வேண்டும்.

மேற்படி நபர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் சொத்து வாங்க விற்க தானம் கொடுக்க ஃபெமா (FEMA) என்று சுருக்கமாக சொல்ல கூடிய ஃபாரின் எக்சேஞ் மேனேஜ்மென்ட் ஆக்ட் (Forign Exchange Management Act) என்ற ஒரு சட்டம் இருக்கிறது. அந்த சட்டத்தின் படி எந்த வித விதி மீறலும் அத்து மீறலும் செய்யாமல் பார்த்து கொள்ள வேண்டியது தான் முக்கியம்.

உண்மையில் OCI-யும் PIO-வும் கண்டிப்பாக இந்தியாவில் விளை நிலங்கள், தோட்டங்கள், பண்ணைகள் வாங்க கூடாது ஆனால் என் கள அனுபவத்தில் பல நுழைவு சமூகம் (Gated Community) பண்ணை நிலங்களை, ஏக்கர் கணக்கான விவசாய நிலங்களை பல OCI கார்டு வைத்திருப்பவர் வாங்கியிருக்கின்றனர்.

அவர்கள் எல்லாம் இனி விற்கும் பொழுது அதிக கவனமும் ரிசர்வ் வங்கி (RBI)அனுமதியும் தேவைப்படும். முன்பு ஆதார் இல்லை, ஆன்லைன் பதிவு இல்லை, இப்பொழுது மாவட்ட தோறும் நடக்கும் பத்திரங்களை, எல்லா வகையிலும் தணிக்கை செய்யாமல் வட்டம் தோறும் ஒரு அலுவலகம் பதிவுதுறையில் தனியாக செயல்பட ஆரம்பித்துவிட்டது.

அந்ததணிக்கை அலுவலகத்தை ஃபெமா (FEMA) காவல் காரர்களின் கண்காணிப்புக்கு போய்விடுகிறது என்பதை நினைவில் கொள்ளவும். சரி ஃபெமா (FEMA) ஒன்று இருக்கிறது என்று தெரிந்து கொண்டீர்கள் பத்திரிக்கைகளில் ஃபெமா (FEMA) என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள் அப்படி என்றால் அதுவும் ஒரு சட்டம் தான் அதற்கு விரிவாக்க பெயர் ஃபாரின் எக்சேஜ் ரெகுலேசன் ஆக்ட் (Forign Exchange Regulation Act)-யை தான் ஃபெமா (FEMA) என்று சொல்கிறார்கள் மேற்படி ஃ பெராசட்டம் 1971 ஆம் ஆண்டு போடப்பட்டது. அந்த சட்டத்தை தான் மேம்படுத்தி 1999-ம் ஆண்டு ஃபெமா என்ற புதிய சட்டமாக நடைமுறை படுத்தியுள்ளது.

தப்பி தவறியும் பாகிஸ்தான் பங்களாதேஷ் போன்ற நாட்டிற்கு வேலைக்கு சென்று வந்து வெளிநாடு வாழ் இந்தியர் என்று சொல்லி OCI கார்டு வாங்க முடியாது அதன் அடிப்படையில் தமிழ் நாட்டில் சொத்து வாங்குதலும் விற்றலும் கூடாது.

அதே போல பாகிஸ்தான், பங்களாதேஷ், பூடான், சீனா, ஸ்ரீலங்கா, ஆப்கானிஸ்தான், ஈரான், நேபாள் ஆகிய நாட்டினர் POI கார்டு வாங்க முடியாது அதன் அடிப்படையில் இங்கு சொத்தும் வாங்க முடியாது.

பாண்டிச்சேரியில் இருந்து பிரன்சிற்கு சென்றவர்கள் பிரான்சு குடியுரிமை, பிரான்சு நாட்டுரிமை, பிரான்சு ரெனேசான் மூவகையில் 1961-க்குமுன்பு இருந்தார்கள். தற்பொழுது பிரான்சில் வம்சா வழி இந்தியராகவும் அல்லது வெளிநாடு இந்தியராகவும் இரண்டு வகையாக மாற்றப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ளவும்.

இனிவரப் போகும் சிட்டிசன் ஷிப் அமென் ட்மெண்ட் ஆக்ட் (Citizenship Amendment Act) நேஷனல் பாப்புலேஷன் ரிஜிஸ்டர் (National Population Register) (NPR) and the நேஷனல் ரிஜிஸ்டர் ஆப்சிட்டிசன் (National Register of Citizens) (NRC) சட்டங்களால் சொத்து வாங்கும் FEMA விதிகளும் மாற்றத்திற்கு உட்பட வாய்ப்பு இருக்கிறது.

ஒரு மில்லியன் டாலருக்கு மேல் அதாவது 60 இலட்சத்திற்கு மேல் ஒரு OCI-வோ நிலம் வாங்குவதற்காக பணபரிமாற்றம் செய்தால் கண்டிப்பாக ரிசர்வ் வங்கியின் அனுமதி வேண்டும்.

தமிழ்நாட்டில் வீடு, மனை, வணிக வளாகம், வணிக இடம் மட்டுமே வாங்கலாம் விற்கலாம். அதேபோல் ஒருOCI-ன் சொத்தை வாங்குபவர்கள் இந்தநாட்டில் வாழும் இந்தியர், வேறு ஒரு OCI அல்லது ஒரு POI– ஆக இருக்கலாம்.

ஒரு POI-யும் அதே போல விற்கலாம் வாங்கலாம் ஆனால் அந்த அந்த காலங்களில் உள்ள ஃபெமா சட்ட விதிகளை கண்டிப்பாக ஒப்பிட்டு பார்த்து கொள்ள வேண்டும்.

OCI-யோ அல்லது POI-யோ இந்தியாவில் நிறுவனம் ஆரம்பிக்கலாம். அதன் பேரில் நிறுவன சட்டபடி தமிழ் நாட்டில் சொத்து வாங்கலாம் அந்த சொத்து தோட்டங்களாக பண்ணை நிலங்களாக விளை நிலங்களாக இருந்தால் ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெற வேண்டும்.

அதே போல பூடான், பர்மா, இலங்கை, சீனா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்த குடியுரிமையை விடுவித்து விட்டு சட்டபடி இந்திய குடியுரிமை பெற்ற பிறகு ரிசர்வ் வங்கி அனுமதியுடன் சொத்து தமிழ் நாட்டில் வாங்கலாம்.

வெளிநாட்டு குடிமகன்களோ வெளிநாட்டினர் ஆரம்பித்த உரிமையாளராக இருக்ககூடிய நிறுவனங்களோ தமிழ்நாட்டில் எந்த வித சொத்தும் வாங்க கூடாது வேண்டுமானால் 5 ஆண்டுகளுக்குள் குத்தகை எடுத்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *