அப்பார்ட்மெண்ட்டில் வீடு வாங்கும் போது தோன்றும் தோற்ற பிழைகள்!

Published by : KAMESH KANNAN (வெற்றி யுகம்/Vetri Yugam)

(We have Researched and Collected the Materials and Published in the Blog)

இலவச திட்டங்கள், தள்ளுபடிகள், பரிசுகள் போன்றவற்றில் மயக்கம் கொள்ள வைக்கும் பிழை.

 

மனை விலைகள் ஒரு போதும் இறங்காது, ஏறி கொண்டேதான் இருக்கும் என்று சொல்லப்படும் பிழை.

 

வாங்கும் வீடுகளில் உயர்ந்த வாடகை கிடைக்கும் என்ற மாயை ஏற்படுத்துவர்.

 

அடுக்குமாடி குடியிருப்புக்கு கட்டுமானர் குறிப்பிடும் விலையை நிச்சயம் ஒத்துக்கொள்ள வேண்டும்என்பதும் பிழை தான்.

 

கிளப்பிற்கு, பார்க்கிற்கு, பராமரிப்புக்கு, வரிகள் என நிறைய தொகை செலவு ஆகும். இவை விளம்பரங்களில் வாரது என்பதை நினைவுப் படுத்தி கொள்ளவும்.

 

வாங்குவதற்கு காலம் தாமதம் ஆகும் போது சீக்கரம் விற்பனை முடிந்து விடும் என்று நெருக்கும் போதும், விலை ஏற போகுது என்று சொல்வதும் ஒரு தோற்றப் பிழை.

 

நிச்சயம் வீட்டை ஒப்படைப்பதில் கால தாமதங்கள் ஆகும். ஆகாது என்று நம்பிக் கொண்டு இருக்க வேண்டாம்.

 

கால தாமதத்திற்கு கொடுக்கப்படும் நஷ்டஈடு உங்களின் மாத தவணையை கட்ட உதவும், என் நினைப்பதும் , உடனடியாக தாமத நஷ்டஈடு கொடுத்து விடுவார்கள் என்று நம்புவதும் ஒரு பிழை.

 

குடியிருப்பு மாதிரிகளில் எந்த மாதிரியான பெயிண்ட், லைட்டிங் கொடுத்தால் அறை பெரிதாக தெரியும் என பில்டர்களுக்கு தெரியும். எனவே அதனை நம்பி வீடு வாங்குவது ஒரு பிழை.

 

பில்டர்கள் வங்கிகளுடன் தொடர்பில் இருப்பதால், கட்டிடத்தின் செயல் திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்திருக்கும் என நம்புவது ஒரு பிழை.

 

பில்டர்க்கு இருக்கும் வங்கியின் தொடர்பு இலாபமுள்ள வட்டி விகிதங்களை கொடுக்கும் சிறந்த வீட்டுக்கடன் திட்டங்களை பரிந்துரைப்பார் என்று நினைப்பதும். எதிர்கால வட்டி விகிதங்கள் குறையும் என்று கணக்கு போடுவதும் பிழை.

 

முன்பதிவு செய்துவிட்டு இரத்து செய்தால் எத்தனை % கழிவு என தெளிவாக கேட்டு கொள்ளுங்கள், முன்பதிவு பணத்தை பெறுவதற்கு காவடி எடுக்க வேண்டும்.

 

விற்பனை பிரதிநிதி அட்வான்ஸ் பெறுவதிலேயே கவனமுடன் உங்களை நகர்த்துவார். அதனை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *